.

Pages

Saturday, October 12, 2019

அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் நியமிக்கப்பட்ட பெண் மருத்துவர்களை வார வேலை நாட்கள் முழுவதும் பணியாற்ற கோரிக்கை!

அதிராம்பட்டினம், அக்.12
அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் பொதுநல மருத்துவ சிகிச்சைக்காக நிரந்தரமாக பணி நியமனம் செய்யப்பட்ட பெண் மருத்துவர்களை வார வேலை நாட்கள் முழுவதும் பணியாற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு பல்வேறு கிரமங்களிலிருந்தும் நாள்தோறும் சுமார் 600 க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில், மகப்பேறு மருத்துவ சிகிச்சைக்காக பெண் மருத்துவர் ஒருவரும், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், காய்ச்சல் உள்ளிட்ட பொதுநல மருத்துவ சிகிச்சைக்காக மற்றொரு பெண் மருத்துவரும் நிரந்தரப் பணியில் அமர்த்தப்பட்டனர்.

இதில், மகப்பேறு மருத்துவர் வாரத்தில் செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை சனிக்கிழமை ஆகிய 3 நாட்களும், பொதுநல மருத்துவர் வாரத்தில், திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை ஆகிய 3 நாட்கள் மட்டுமே மருத்துவமனையில் பணி புரிகின்றனர். மீதமுள்ள நாட்களில் இவர்கள் மருத்துவமனைக்கு வந்து நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதில்லை. இதனால், மற்ற தினங்களில் மருத்துவத்திற்காக மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட நோயாளிகள் மருத்துவர்கள் அங்கு இல்லாததைத்கண்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

பிரசவ வலி ஏற்பட்டு பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணிகள் மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர் இல்லாததால், பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட தொலை தூரப் பகுதிகளில் உள்ள மருத்துவமனைக்கு சென்று விடுகின்றனர். இதனால், கடும் அவதிக்குள்ளாக நேரிடைகிறது. செல்லும் வழியில் தாய்~சேய் உயிரிழப்பும் ஏற்படுகிறது.

எனவே, அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில், மகப்பேறு மற்றும் பொதுநல மருத்துவ சிகிச்சைக்காக நிரந்தரமாக பணி நியமனம் செய்யப்பட்ட பெண் மருத்துவர்களை வார வேலை நாட்கள் முழுவதும் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் மட்டும் பணியாற்றிட, மாவட்ட சுகாதாரத்துறை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.