.

Pages

Thursday, October 24, 2019

தஞ்சை மாவட்டத்தில் பொருளாதார கணக்கெடுப்பு, புள்ளி விவரங்கள் சேகரிக்கும் பணி தொடக்கம்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் டிஜிட்டல் முறையில் நடைபெறும் பொருளாதார கணக்கெடுப்பு பணியை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (24.10.2019) செல்போன் செயலி மூலம் துவக்கி வைத்தார்.

மத்திய புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சக வழிகாட்டுதலின்படி 7-வது பொருளாதார கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது. 2019ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு நாடு முழுவதும் மத்திய அரசு நிதி உதவியுடன் இக்கணக்கெடுப்பு நடைபெறுகிறது.

இக்கணக்கெடுப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனை இன்று தஞ்சாவூர் ராமநாதன் ரவுண்டானா அருகே உள்ள கடைகளில் கணக்கெடுக்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை துவக்கி வைத்தார்.

மேலும், கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் பலத்துடன் இயங்கிவரும் தொழில் நிறுவனங்கள், சேவை நிறுவனங்கள, தொழிற்சாலைகள்,  வீடுகளில் செயல்படும் நிறுவனங்கள், வளாகம் இல்லாமல் செயல்படும் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான பொருளாதார நடவடிக்கைகள் கொண்ட நிர்வாகங்களின் விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளன.

இக்கணக்கெடுப்பு விவரங்கள் இந்திய அளவிலும், மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பல்வேறு துறைகளுக்கான திட்டங்கள் தீட்டும் தொழில் வளர்ச்சிக்கும், மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கும், பிற அரசின் செயல்பாடுகளுக்கும் முக்கிய ஆதாரமாக திகழ்கிறது.
 
எனவே, இந்த கணக்கெடுப்பு பணிக்கு இல்லம் தேடி வரும் கணக்கெடுப்பாளர்களுக்கு பொதுமக்கள் மற்றும் தொழில் நிறுவனத்தினர் சரியான புள்ளி விவரங்களை அளித்து உரிய ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர்  தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், புள்ளியியல் துறை துணை இயக்குநர் மோகன், புள்ளியியல் துறை உதவி இயக்குநர்கள், வட்டார புள்ளியியல் அலுவலர்கள், தேசிய புள்ளியியல் துறை அலுவலக முதன்மை புள்ளியியல் அலுவலர் வெங்கட்ராமன், மத்திய பொது சேவை மைய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ்கண்ணா மற்றும் கணக்கெடுப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.