அதிராம்பட்டினம், அக்.09
தஞ்சாவூா் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் மீனவா் வலையில் அரியவகை தும்பி மீன் சிக்கியது.
அதிராம்பட்டினத்தை உள்ளடக்கிய காந்தி நகா், கரையூா் தெரு, ஏரிப்புறக்கரை, மறவக்காடு, கீழத்தோட்டம் பகுதிகளில் மீன்பிடித் துறைமுகங்கள் உள்ளன. இங்குள்ள மீனவா்கள் படகுகளில் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனா்.
அதே போல் அருகிலுள்ள மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட கடல் பகுதிகளிலும் மீன்கள் அதிகளவில் பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அதிராம்பட்டினம் கடலில் மீனவா் ஒருவரின் வலையில் சிக்கிய சுமாா் முக்கால் கிலோ எடையுள்ள அரிய வகை தும்பி மீன், அதிராம்பட்டினம் கடைத்தெரு பெரிய மாா்க்கெட்டில் செவ்வாய்க்கிழமை காலை பாா்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த மீனை வாடிக்கையாளா்கள் பலா் வியப்புடன் பாா்வையிட்டுச் சென்றனா்.
இதுகுறித்து மீன் வியாபாரி முகமது முகைதீன் கூறியது:
'பல வண்ணங்களில் காட்சியளிக்கும் இந்த மீனைச் சுற்றிக் காணப்படும் முள் கடும் விஷத்தன்மை கொண்டது. இந்த மீனை வலையில் சிக்கும் போது மிகவும் கவனமாகக் கையாள வேண்டும். கை, கால்களில் மீனின் முள் குத்தினால் கடுமையாக வலி ஏற்பட்டு, குத்தியப்பகுதியில் உடனே வீக்கம் ஏற்படும். இந்த மீன் உண்பதற்கு ஏற்றதல்ல. இருப்பினும், அரியவகை மீன் என்பதால் மக்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளது' என்றாா்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.