அதிராம்பட்டினம், அக்.05
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சார்பில் நடைபெற உள்ள சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பும் முன்னாள் மாணவர்கள் தங்களது பெயரினை முன்பதிவு செய்துகொள்ள அழைப்பு விடப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடபட்டுள்ள அழைப்பில் கூறியிருப்பது;
மதிப்புமிகு நம் பள்ளி முன்னாள் மாணவச்சொந்தங்களே...
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமப் பகுதியினர் கல்வியில், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய காலக்கட்டத்தில், 'கல்வித்தந்தை' ஹாஜி எஸ்.எம்.எஸ். சேக் ஜலாலுதீன் அவர்களின் முழு முயற்சியால், கடந்த 25.06.1949 அன்று காதிர் முகைதீன் உயர்நிலைப்பள்ளி தொடங்கப்பட்ட பின், அன்று முதல் இன்று வரை இப்பகுதி, மாணவ, மாணவிகளுக்கு சாதி, மத, இன வேறுபாடின்றி, சிறந்த கல்வி, நல்லொழுக்கத்தை புகட்டி, அவர்களை தலைசிறந்த கல்வியாளர்களாகவும், தொழில் முனைவோராகவும், அரசு அலுவலர்களாகவும், வெளிநாடுகளில் பணிபுரிவோராகவும், விளையாட்டு வீரர்களாகவும், சிறந்த மக்கள் பிரதிநிதிகளாகவும் உருவாக்கி அவர்களின் முன்னேற்றப் பாதைக்கு அடித்தளமிட்டு வருகிற ஓர் பராம்பரிய மிக்க, கல்வி நிறுவனம்தான் காதிர் முகைதீன் கல்விக் குழுமம்.
நமது பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு சிறந்த கல்வியும், நல்லொழுக்கமும் போதிக்கப்படுகிறது. நமது பள்ளி அரசுப் பொதுத்தேர்வுகளில் அதிக தேர்ச்சி விகிதமும், கால்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் தொடர்ந்து சாதனை நிகழ்த்தி வருகிறது.
கடந்த 70 ஆண்டுகளில் (1949 ஆம் ஆண்டு முதல், 2018 ஆம் ஆண்டு வரை ) அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் பலர் அவ்வப்போது நம்மைத் தொடர்பு கொண்டு முன்னாள் மாணவர்களின் மாபெரும் சங்கமம் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க அன்புக் கட்டளையிட்டு வருகின்றனர்.
இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் மாணவர்களின் பரஸ்பரம் நலம் விசாரிப்பு, ஆசிரியர்கள் நலம் விசாரிப்பு, பள்ளிப் பருவத்தில் நிகழ்ந்த மலரும் நினைவுகள் மகிழ்ச்சியுடன் அசைபோடுவதாக அமையும்.
எனவே, சங்கம நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பும் முன்னாள் மாணவர்கள் தங்களது பெயர், ஊர், படித்த ஆண்டு, அலைப்பேசி எண் உள்ளிட்ட விவரங்களை முன்பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது. நன்றி!

இதுபற்றிய மேலதிக தகவல் மற்றும் முன்பதிவு தொடர்புக்கு: 9344971582 (வாட்ஸ்அப்)
மின்னஞ்சல் முகவரி:
kmbalumini2019@gmail.com
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.