அதிராம்பட்டினம், அக்.19
சென்னைக்கு உடனடியாக விரைவு ரயில் இயக்கவும், அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் ஒருங்கிணைந்த டிக்கெட் முன்பதிவு கூடம் அமைக்கக் கோரி இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ் கனியிடம், அதிராம்பட்டினம் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியினர் மனு அளித்தனர்.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி மாநில துணைத்தலைவர் எஸ்.எஸ்.பி நசுருதீன் (வயது 65) அவர்கள், கடந்த (செப்.25) அன்று, அதிராம்பட்டினத்தில் காலமானார். இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதத்தில், இன்று (அக்.19) சனிக்கிழமை மாலை அதிராம்பட்டினம் வருகை தந்த இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ் கனியிடம், காரைக்குடி ~ திருவாரூர் வழியாக சென்னைக்கு உடனடியாக விரைவு ரயில் இயக்கவும், அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் ஒருங்கிணைந்த டிக்கெட் முன்பதிவு கூடம் அமைக்கக் கோரியும் அதிராம்பட்டினம் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியினர் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கே.நவாஸ் கனி எம்.பி, காரைக்குடி ~ திருவாரூர் வழித்தடத்தில் விரைவு ரயில் இயக்குதல் பற்றி ரயில்வே துறை அமைச்சகத்தில் பலமுறை தான் வலியுறுத்தி வந்ததாகவும், மீண்டும் இதுகுறித்து, இரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை வைப்பதாவும் தெரிவித்தார். மேலும், அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில், ஒருங்கிணைந்த டிக்கெட் முன்பதிவு கூடம் அமைப்பது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாகவும் கூறினார்.
முன்னதாக, மறைந்த எஸ்.எஸ்.பி நசுருதீன் மறுமை வாழ்வு சிறக்க தாம் பிரார்த்தனை செய்வதாக அக்குடும்பத்தரிடம் தெரிவித்தார். பின்னர், மருத்துவ ஓய்வில் இருந்து வரும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி அதிராம்பட்டினம் முன்னாள் செயலாளர் ஹாஜி எம்.ஏ முகமது சாலிகு இல்லம் சென்று நலம் விசாரித்தார்.
அப்போது, அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.எம் ஜெய்னுல் ஆபீதீன், தஞ்சாவூர் மாநகரத் தலைவர் ஹாஜி ஜி.எஸ் ஜாஃபர், அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன், செயலாளர் வழக்குரைஞர் ஏ.முனாப், பொருளாளர் ஏ.சேக் அப்துல்லாஹ், துணைச் செயலாளர்கள் முகமது அபூபக்கர், மு.காதர் முகைதீன், மாவட்ட ஊடகப் பொறுப்பாளர் ஏ.சாகுல் ஹமீது, மாவட்ட பிரதிநிதி எம்.ஆர் ஜமால் முகமது, இக்பால், சம்சுதீன், சாகுல் ஹமீது உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.