.

Pages

Friday, October 4, 2019

ஷார்ஜாவில் தமிழக இளைஞருக்கு விருது (படங்கள்)

ஷார்ஜா: அக். 03
ஷார்ஜா இந்திய சங்கத்தில் நடந்த ஓணம் பண்டிக்கை சிறப்பு நிகழ்ச்சியில் இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணத்தைச் சேர்ந்த இளைஞர் ஜே. ஆஷிக் அஹமது பொது நல சேவைக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

ஜே. ஆஷிக் அஹமது திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் இளநிலை வேதியியல் பட்டம் பயின்றவர். தற்போது ஷார்ஜாவில் உள்ள குவைத்தி ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது பணியின் ஒரு பகுதியாக எதிர்பாராத நிலையில் மரணமடைபவர்களின் குடும்பத்தினருடன் இணைந்து பணியாற்றி ஷார்ஜாவில் நல்லடக்கம் செய்யவோ அல்லது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கவோ தேவையான உதவிகளை செய்து வருகிறார்.

மேலும் பொருளாதார வசதியில்லாமல் சிகிச்சை பெறுபவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்கள், அமீரகத்தில் பொது மன்னிப்பு காலத்தில் சொந்த ஊருக்கு செல்ல விரும்புவோருக்கு நண்பர்களின் ஒத்துழைப்புடன் உதவிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை தன்னார்வத்துடன் செய்து வருகிறார்.

இத்தகைய பணியில் சிறப்பான வகையில் ஈடுபட்டு வருவதன் காரணமாக அவரை உற்சாகப்படுத்தும் வகையில் சார்ஜா இந்திய சங்கம் அவருக்கு இந்த சிறப்பு விருதை வழங்கி கௌரவித்துள்ளது. இதனை பிரபல மலையாள பாடகர் அப்சல் வழங்கினார்.

மேலும் இவர் துபாயில் செயல்பட்டு வரும் தேவிபட்டிணம் நலச்சங்கத்தின் முன்னாள் பொருளாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. விருது பெற்ற அவருக்கு பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.