இந்நிகழ்ச்சியில் காதிர் முகைதீன் கல்லூரியின் முதல்வர் முனைவர் A. ஜலால் அவர்கள் தலைமையேற்று வாழ்த்துரை வழங்கினார். கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் உதுமான் முகைதீன், ஆங்கிலத்துறையின் தலைவர் முனைவர் A. முகம்மது முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார்கள்.
சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட காதிர் முகைதீன் கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேராசிரியர் முஹம்மது அப்துல் காதர் அவர்கள் வாழ்த்துரை வழங்கி போட்டிகளை நடத்திவைத்தார். முன்னதாக தமிழ்துறையின் தலைவர் முனைவர் A. கலீலுர் ரஹ்மான் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
'தேர்தலில் வாக்காளர்களின் கட்டாய வாக்குரிமை ' என்ற தலைப்பில், 7 நிமிட கால அவகாசம் வழங்கி பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் பேராசிரியர் முஹம்மது அப்துல் காதர், தமிழ்துறையின் தலைவர் முனைவர் A. கலீலுர் ரஹ்மான், துமிழ்த்துறை பேராசிரியர் செய்யது அஹமது, பேராசிரியை சாபிரா பேகம் ஆகியோர் நடுவராக அமர்ந்து இருந்தனர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
நிகழ்ச்சிகள் அனைத்தையும் துமிழ்த்துறை பேராசிரியர் செய்யது அஹமது கபீர் அவர்கள் இனிய தமிழில் அழகாக தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பல்வேறு ஊர்களிலிருந்து வந்திருந்த 15 கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் பேச்சுபோட்டி, கவிதை போட்டிகளில் பங்கேற்ற தங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தினர். பங்கேற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
முதலாவதாக தேர்ந்தெடுக்கப் பதட்ட கவிதை இங்கே இடம் பெற்றிருந்தால் நல்லா இருக்கும் - வாழ்த்துக்கள்
ReplyDelete