அதிரை அருகே உள்ள பட்டுக்கோட்டை பகுதிக்கு புதிதாக ஆம்புலன்ஸ் வாகனம் வாங்கி கிளையினரிடம் ஒப்படைப்பது என தமுமுகவின் முடிவையடுத்து, கடந்த சில வாரங்களுக்கு முன்பு வாகன டீலரிடம் முன்பதிவு செய்யப்பட்டது. ரூபாய் 8 லட்சம் மதிப்புள்ள இந்த வாகனத்தை விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அதன் நிர்வாகிகள் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தமுமுக நிர்வாகிகளிடம் ஆம்புலன்ஸ் வாகனம் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து இன்று பட்டுகோட்டையில் அழகிரி நினைவரங்கில் நடைபெற்ற அர்பணிப்பு விழா - சமூக நல்லிணக்க பொதுக்கூட்டத்தில் தமுமுகவின் மூத்த தலைவரும், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமாகிய பேராசிரியர் M.H. ஜவாஹிருல்லாஹ், மமக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி, மாநில அமைப்பு செயலாளர் மதுக்கூர் K. ராவுத்தர்சா, தலைமை கழக பேச்சாளர் திருச்சி A. ரபீக் ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள்.
இதை தொடர்ந்து ஆம்புலன்ஸ் அர்பணிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் டாக்டர் ஹாஜி M. அசரப் அலி ( பராக்கா )அவர்கள் ஆம்புலன்சின் சாவியை தமுமுகவின் மூத்த தலைவரும், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமாகிய பேராசிரியர் M.H. ஜவாஹிருல்லாஹ் அவர்களிடம் ஒப்படைத்தார்.
முன்னதாக வரவேற்புரையை தமுமுகவின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அதிரை S. அஹமது ஹாஜா நிகழ்த்தினார்.
இவ்விழாவில் மாவட்ட - ஒன்றிய - கிளை நிர்வாகிகள் ஆகியரோடு பட்டுகோட்டை, அதிரை, மதுக்கூர், முத்துபேட்டை புதுபட்டினம், மல்லிபட்டினம், சேதுபாவாசத்திரம் பேராவூரணி உள்ளிட்ட ஊர்களின் தமுமுக- மமக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
பதிவுக்கு நன்றி
ReplyDeleteதகவலுக்கும் நன்றி
வாழ்த்துகள் பாராட்டுகள்
இப்படிக்கு.
ஜம் ஜம் அஸ்ரப்
கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
செக்கடிமோடு
Adirampattinam.- 614701
Thanjavur district.
-0091 9976438566