.

Pages

Wednesday, June 4, 2014

அதிரையில் குடிநீர் பற்றாக்குறை எதிரொலி ! பேரூராட்சியின் உதவி இயக்குனர் நேரடி ஆய்வு !!

அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் குடிநீர் விநியோகப்பணிகள் ஏற்படும் குறைகள் தொடர்பாக பேரூராட்சியின் உதவி இயக்குனர் நேற்று முதல் நேரடி ஆய்வை மேற்கொண்டு வருகிறார். ஆய்வின் போது அதிரையில் நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறை தொடர்பான பிரச்சனைகள் கண்டறிந்து அவற்றை உடனடி நிவர்த்தி செய்ய சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டுகொண்டார்.

ஆய்வின் போது பேரூராட்சியின் உதவி இயக்குனர், உதவி செயற்பொறியாளர், பேரூராட்சி செயல் அலுவலர், பிளம்பர், அதிரை பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் , வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



 


4 comments:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    சிரித்தாலும் கண்ணீர் வரும், அழுதாலும் கண்ணீர் வரும். இது நியதி.

    சில சமயங்களில் தண்ணீரை வெறுப்போம், பல சமயங்களில் தண்ணீரை தேடுவோம். இது விதி.

    இந்த விதியோடு விளையாடிய மனிதன் இன்று தண்ணீரை தேடித் தேடி அலைகின்றான். முடிவு வியர்வைதான் தண்ணீராய் வருது. இதுவும் ஒரு வகையில் விதிதான்.

    எத்தனை அதிகாரிகள் இருந்து என்ன, இந்த உலகத்தில் உள்ள அதிகாரிகள் எல்லோரும் நம்ம ஊரில் வந்து ஆய்வு செய்தால் தண்ணீர் வந்து விடுமா? செயலில் ஊழல், வாக்குறுதியில் ஊழல், பார்வையில் ஊழல், உட்கார்ந்தால் ஊழல், இப்படி திரும்பினால் ஊழல், என்னங்கப்பா இது!.

    பொதுமக்களின் கோரிக்கைகள், தொலைபேசி அழைப்புகள், குறைகள் இவைகளை உதாசீனப்படுத்தும் அரசாங்க ஊழியர்கள், அலுவலர்கள், அதிகாரிகள். இருக்கும்வரை!!.

    நமதூருக்கு விடிவு காலமா!!!. பாவம் பொதுமக்கள். பொதுமக்களுக்கு நல்லது செய்யணும் என்று எந்த அதிகாரி நூற்றுக்கு நூறு உண்மையாக செயல் படுகின்றானோ அந்த அதிகாரியோடு வல்ல நாயனின் கிருபையும் பெலனும் கூடவே இருக்கும் என்பதில் சந்தேமில்லை.

    (குறிப்பு:- பொதுமக்களே அதிகாரியோடு சேர்ந்துகொண்டு தவறு செய்யும் போது பலன் எப்படி கிடைக்கும்)

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  2. அதிகாரிகள் வந்து என்ன செய்தார்கள், விளக்கம் தாங்கள்.

    ReplyDelete
  3. அதிரையில் தண்ணீர் பஞ்சம், அதிகாரிகளின் அழகான ஆய்வுகள், என்ன ஆய்வு செய்தார்கள்.

    போர் சரியாக இருக்குதா, பைப்பு இணைப்பு சரியாக இருக்குதா, மின் இணைப்பு சரியாக இருக்குதா, எல்லாம் சரியாக இருக்குது, ஆனால் தண்ணீர்தான் சரியாக வரமாட்டேன்கிறது. இப்படி ஒரு நோட்ஸ் போட்டுவிட்டு முடித்து விடுவார்கள்.

    பிறகு, வழக்கம் போல் தங்கள் கணக்கை அதிரையில் இயங்கும் அதிகாரிகளிடத்தில் சரியாக கூட்டிக் கழித்து வாங்கிக் கொண்டு போவார்கள். எப்போ இந்த ஊழலும் லஞ்சமும் ஒழியுதோ அன்றுதான்.......................!?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.