உதவ எண்ணுவோர் நமதூர் தக்வா பள்ளியில் தங்கியிருக்கும் இந்த சகோதரர்களிடம் நேரிடையாகவோ அல்லது அறிவிப்பு தட்டியில் குறிபிடப்பட்டுள்ள AAMF நிர்வாகிகளையோ தொடர்பு கொண்டு உதவலாம் எனவும் அதில் கூறப்பட்டிருந்தது.
அதிரையின் அனைத்து மஸ்ஜீத்களிலிருந்தும், முக்கிய பகுதிகளிலிருந்தும் திரட்டப்பட்டதன் மூலம் சகோதரர்களின் கைக்கு ரூபாய் 1 லட்சத்திற்கும் குறையாமல் நிதி வந்தடைந்தது. இதற்காக நிதி உதவி வாரி வழங்கிய நல்லுள்ளங்களுக்கு அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் சார்பில் அதன் செயலாளர் பேராசிரியர் முஹம்மது அப்துல் காதர் அவர்கள் நன்றியை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறார். நன்றி அறிவிப்பின் போது பீஹார் சகோதரர்களுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் AAMF நிர்வாகி S.S. சேக்தாவூது மற்றும் பீஹார் சகோதரர்கள் உடனிருந்தனர்.
Masha Allah.
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
உங்கள் செயல்களுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
கடந்த ஒருவருடத்துக்கும் மேலாக அதிரை அனைத்து முஹல்லா கூட்டம் நடைபெறவில்லையே, என்ன காரணம்?
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com
நல்ல விஷயம் தான் ஆனால் கை நீட்ட பழகி விடக்கூடாது
ReplyDeleteஅதிரை அனைத்து முஹல்லா தொடக்கத்தில் மிகவும் உத்வேகமாகத் தொடங்கப் பட்டது.
ReplyDeleteதுபாயில் தொடங்கப்பட்டு ஊரின் முக்கியப் பிரச்சனைகளுக்கெல்லாம் முழு அதாரிடியாக செயல்படுமென்று எதிர்பார்க்கப்பட்டது.
அதைதொடர்ந்து மாதம் ஒரு முஹல்லாவில் கூட்டம் நடத்தி நல்ல சம்சாவும் டீயும் வழங்கப்பட்டதுடன் சரி.
இந்தக் குழிவெட்டுபவர்களுக்கு சம்பளம் கொடுப்பதைத் தவிர வேறு எந்த உருப்படியான செயலையும் செய்ததாக கடந்தகால அதன் செயல்பாடுகள் காட்டவில்லை.
ஒரு சில பணக்காரர்களின் கைப்பாவைகளாக இந்த அமைப்பு அவர்களின் கருத்தை அனைவர் மீதும் திணிக்கவே முயன்றது என்பதே நாம் கண்டது.
இப்போதும் சில பணக்காரர்கள் அனைத்து முஹல்லாவின் செயல்பாடுகளின் அறைகளைப் பூட்டி சாவியைத் தங்களது கரங்களில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். தலைவர் செயலர் போன்றவர்கள் அந்த சாவியைத் தேடி அலைந்து கொண்டு இருக்கிறார்கள்.
ஊரில் பல பிரச்னைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அனைத்து முஹல்லா என்கிற அமைப்பு அணைத்து
வைக்கப்பட்டு இருக்கிறது.
மீண்டும் மறு அமைப்புக் கூட்டம் நடத்தி புதிய நிர்வாகிகள் தேர்ந்தேடுக்கபட்டு செயல்பாட்டுக்கு வருமா? அல்லது வருடம் ஒருமுறை காலண்டர் மட்டும் தந்து தன்னை நினைவு படுத்திக் கொள்வதுடன் நிறுத்திக் கொள்ளுமா?
காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
AAMF செயல்படாமல் இருப்பதற்குக் காரணம் , சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தேடுக்கப்படாமல் / தேர்ந்தெடுக்க முடியாமல் முடக்கிப் போடப்பட்டு இருப்பதுதான் காரணமா?
ReplyDeleteஒரு முஹல்லா சங்கத்தின் அரசியல்லுக்காக ஊர் முழுதுக்குமான சங்கம் முடங்கிக் கிடப்பது சரியா?
//நல்ல விஷயம் தான் ஆனால் கை நீட்ட பழகி விடக்கூடாது//
ReplyDeleteDear Adirai Abu Mohammad........I am accepted your comment is very correct.
கருது பதிவு செய்வது ரொம்பவம் சுலபவம், குறை கூறும் நீங்கள் தயவு செய்து நம் ஊருக்கு என்ன செய்தீர்கள் என்று பதிவு செய்யவும்
ReplyDeleteஇங்கு பதிவு செயும் நண்பரிடம் நம் ஊருக்க 10 டாலர் நன்கொடை கேட்டு இல்லை என்று சொன்னதை மனதில் வைக்க வேண்டும்
ReplyDelete