பஹ்ரைனின் மனாமா நகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை செய்து வருபவர் பினாய். கேரள மாநிலத்தின் திருச்சூர் மாவட்டத்தில் கோடலி அம்பலூர் என்ற சொந்த ஊருக்கு சென்றிருந்த இவரது மனைவி அஸ்வினி ஒருவயது பெண் குழந்தையுடன் கொச்சியில் இருந்து பஹ்ரைன் செல்லும் விமானத்தில் ஏறினார். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது குழந்தை ரிஷி பிரியாவுக்கு காய்ச்சலுடன் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், அந்த விமானம் வழியில் அவசரமாக அபுதாபியில் தரையிரக்கப்பட்டது. அபுதாபி விமான நிலையத்தை அடைவதற்குள் குழந்தை ரிஷி பிரியா பரிதாபமாக உயிர் பிரிந்தது.
குழந்தையின் உடல் அபுதாபியில் ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு பின்னர் பஹ்ரைன் வழியாக கேரளா மாநிலம் சொந்த ஊருக்கு புதன் கிழமை காலை எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. ஓடி ஆடி மகிழ்ச்சியாக பஹரைனுக்கு சென்ற 10 மாதம் பிஞ்சு குழந்தை உயிரற்ற சடலமாக ஊர் வந்து சேர்ந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
நன்றி:தினகரன்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.