.

Pages

Thursday, March 5, 2015

முத்துப்பேட்டை அருகே பெண் அடித்து கொலை !

முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் ஓமங்காடு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி மாணிக்கம் மனைவி ரேவதி(55). இவரது கடலை தோட்டத்தில் அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் மகன் வடிவேல்(40) என்பவரது ஆடுகள் நேற்று மாலை சென்று மேய்ந்தது. இதனை கண்ட ரேவதியின் மகள் வேதவல்லி வடிவேலுவிடம் சுட்டிக்காட்டியுள்ளார். அதற்கு வடிவேலு வேதவல்லி திட்டி தாக்க முயன்றுள்ளார். அப்பொழுது அங்கே வந்த ரேவதி தடுத்தார். அப்பொழுது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்பொழுது ஆத்திரம் அடைந்த வடிவேல் அருகே கிடைந்த இரும்பு பைப்பை எடுத்து ரேவதியை சரமாறியாக தலையில் தாக்கினார். இதனால் படுகாயம் அடைந்த ரேவதி சம்பவ இடத்திலேயே துடித்துடித்து பலியானார். இதனை தடுத்த கணவர் மாணிக்கத்திற்கும் அடி விழுந்தது. தகவல் அறிந்ததும் முத்துப்பேட்டை டி.எஸ்.பி. அருண், இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் அடித்து கொல்லப்பட்ட ரேவதியின் உடலை மீட்டு முத்துப்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு வந்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காயம் அடைந்த ரேவதியின் கணவர் மாணிக்கம் முத்துப்பேட்டை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து அடித்து கொன்ற வடிவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அடித்து கொல்லப்பட்ட ரேவதியின் கணவர் மாணிக்கத்தின் சகோதிரியின் மகன் தான் வடிவேலு என்பது தெரியவந்தது. உறவினர் ஒருவரே இந்த கொலையில் ஈடுப்பட்ட சம்பவம் முத்துப்பேட்டையில் பெரும் பரபரப்பும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை 

காயம் அடைந்த ரேவதியின் கணவர் மாணிக்கம்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.