.

Pages

Wednesday, March 4, 2015

அதிரை மீனவர்கள் வலையில் சிக்கிய 125 கிலோ எடையுள்ள அபூர்வ ராட்சஷ சுறா !

அதிரையை உள்ளடக்கிய காந்தி நகர், கரையூர் தெரு, ஏரிப்புறக்கரை மறவக்காடு, கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன. இங்குள்ள மீனவர்கள் படகுகளில் கடலுக்குச் சென்று மீன்பிடித்து உள்ளூர் மீன் மார்கெட்டிற்கு விற்பனைக்காக கொண்டு வரப்படும். அதே போல் அதிரையை அடுத்து காணப்படும் கடற்கரையோர பகுதிகளாகிய மல்லிபட்டினம், சேதுபாவசத்திரம், கட்டுமாவாடி உள்ளிட்ட துறைமுகங்களில் பிடிக்கப்படும் மீன்களும் இப்பகுதிக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படும். இங்குள்ள மீன் வியாபாரிகள் மீன் கிடைக்காத காலகட்டங்களில் தொலை தூர பகுதிகளுக்கு குறிப்பாக தூத்துக்குடி, நாகப்பட்டினம், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று மொத்தமாக வாங்கி வந்து இங்கு விற்பதும் உண்டு.

உள்ளூர் மார்கெட்டில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு மீன்களின் வரத்து அதிகமாகவே காணப்படும். இதற்கு முன்பு இங்கு விற்பனை செய்யப்பட்ட பண்ணா மீன், தேசப்பொடி, காரைப்பொடி, வாளைமீன், கொடுவா மீன், முரல் மீன், திருக்கை மீன், தாளன் சுறா, இறால், சிங்கி இறால், நண்டு உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை கடைத்தெரு மீன் மார்க்கெட்டுக்கு அதிரை கடலில் பிடிபட்ட ராட்சஷ சுறா மீன் விற்பனைக்கு வந்தது. 125 கிலோ எடையுள்ள சுறா மீனை கிலோ ₹ 170 க்கு விலை வைத்து ஏலம் கேட்கப்பட்டது.

இதுகுறித்து மீன் வியாபாரி கூறுகையில்... 
இந்த சுறாவின் இறக்கைகள் (பிலீ) தனியாக வெட்டி எடுக்கப்பட்டு மருத்துவத்திற்காக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. குறிப்பாக மீன் எண்ணெய் மாத்திரை உட்பட பல்வேறு மருந்துகள் தயாரிப்பதற்கு பயன்படுகிறது' என்றார்.
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.