.

Pages

Saturday, March 7, 2015

திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை பணிக்கு ₹ 130 கோடி ஒதுக்கீடு: கருப்பு முருகானந்தம் தகவல் !

திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை பணிக்கு முதல் கட்டமாக ₹ 130 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

முத்துப்பேட்டையில் நேற்று சென்னை துறைமுக இயக்குனர் கருப்பு முருகானந்தம் கூறியதாவது...
'நாடு முழுவதும் அகல ரயில் பாதையாக மாற்றிய நிலையில் திருவாரூர் - காரைக்குடி பகுதி மட்டும் புறக்கணிக்கப்பட்டு கடந்த ஆட்சியில் துவங்கப்பட்ட பணி கிடப்பில் போடப்பட்டது. இதனால் இப்பகுதியில் ரயில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. இதையடுத்து பாஜக உட்பட பல்வேறு  இயக்கங்கள், அமைப்புகள் போராட்டங்கள் நடத்தினர். இந்த நிலையில் கடந்த எம்பி தேர்தலின் போது பாஜக அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் மத்திய அமைச்சர், பொன். ராதாகிருஷ்ணனின் தீவிர முயற்சியால் திருவாரூர் முதல் காரைக்குடி வரை அகல ரயில்வே பாதைக்கு முதற்கட்டமாக ₹ 130 கோடியை ரயில்வே  அமைச்சகம்  ஒதுக்கியுள்ளது.  இந்த பணி விரைவில் துவங்கும்.

இதே போல திருத்துறைப்பூண்டி முதல் அகஸ்தியம்பள்ளி வரையிலான அகல ரயில்வே பணிக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த பணியும் விரையில் துவங்கும்' என்றார்.

செய்தி:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை

6 comments:

  1. திரு கருப்பு அவர்களே,
    ஆளும் கட்சியின் உங்களின் பேராதரவுடன் நம்ம ஊரின் இந்த திட்டம் நிறைவடையும் பட்சத்தில் உங்களையே நமதூரின் MP ஆக்க நம்மக்கள் முயற்சிப்போம் .

    ReplyDelete
    Replies
    1. இது உங்களுக்கு ஓவரா தெரியல...! இப்படி எல்லாம் உணர்ச்சி வசப்படக்கூடாது.

      Delete
  2. அண்ணன் அவர்களுக்கு நன்றிகள் பல, இன்னும் பல நல்ல காரியங்களை நாங்கள் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம்.

    ReplyDelete
  3. விரைந்து முடித்தால் அனுபவிக்க போறது இந்த தம்பிகோட்டை ஊர் மக்களும் தானே.

    ReplyDelete
  4. It will be use to thiruvarur to karaikudi all people and mr karuppu also

    ReplyDelete
  5. It will be use to thiruvarur to karaikudi all people and mr karuppu also

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.