இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதியின் இன்டேன் காஸ் வாடிக்கையாளர்கள் 984 பேர்கள் இதுவரையில் வங்கி விவரங்களை இன்டேன் காஸ் விநியோகஸ்தரிடம் சமர்பிக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக இன்டேன் காஸ் விநியோகஸ்தர் அதிரை நியூஸ் குழுவில் இடம்பெற்றுள்ள சமூக ஆர்வலர்களை நேரடியாக தொடர்பு கொண்டு உதவ வேண்டுகோள் விடுத்ததன் அடிப்படையில் இதுதொடர்பாக அதிரையில் இயங்கும் மத்திய வங்கிகளிடம், சமையல் எரிவாயு மானியம் பெற வங்கி கணக்கோடு இணைப்பதற்காக வந்துள்ள விண்ணப்பங்களில் ஏதேனும் நிலுவை இருந்தால் உடனடியாக அப்டேட் செய்ய வலியுறுத்தப்பட்டது. மேலும் வங்கி விவரங்களை சமர்பிக்காத 984 பேர்களின் பட்டியலும் வங்கிகளிடம் வழங்கப்பட இருக்கின்றன. இதுதொடர்பாக பொதுமக்களுக்கு நினைவூட்டும் வகையில் அதிரையின் அனைத்து பள்ளிவாசல்கள் மூலம் ஒலிப்பெருக்கி அறிவிப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
அரசின் மானியம் பெற வங்கி விவரங்களை இன்டேன் காஸ்
வினியோகஸ்தரிடம் சமர்ப்பிக்காதவர்களின் விவரங்கள் தரப்பட்டுள்ளன.
விவரங்களை பார்க்க சுட்டியை கிளிக் செய்க:
இந்த பட்டியலில் உள்ளவர்கள் எதிர்வரும் மார்ச் 31 க்குள் உங்கள் ஆதார் எண்ணோடு வங்கி கணக்கை உடனடியாக இணைத்துக்கொள்ளுங்கள். ஆதார் அட்டை இல்லாதவர்கள் தேவையான ஆவணங்களை வங்கியில் சமர்ப்பித்து எரிவாயு மானிய தொகை உங்கள் வங்கி கணக்கில் நேரடியாக வந்து விழ ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்.
உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் நண்பர்கள் இந்த பட்டியலில் யாரேனும் உங்களுக்கு தெரிந்த நபர்கள் அல்லது உங்கள் பகுதியை சேர்ந்தவர்கள் அல்லது உங்களின் உறவினர்கள் இருந்தால் உடனடியாக அவர்களை தொடர்பு கொண்டு தெரியப்படுத்துங்கள்.
அதிரை நியூஸ் குழு

very useful information! kindly post it repeatedly!
ReplyDeletevery useful information! kindly post it repeatedly!
ReplyDelete