.

Pages

Friday, March 6, 2015

முத்துப்பேட்டை கந்தூரி விழாவில் சாலையில் கிடந்த ₹ 40 ஆயிரத்தை உரியவரிடம் ஒப்படைத்தவருக்கு பாராட்டு !

முத்துப்பேட்டை  ஆசாத்  நகரில் பலசரக்கு கடை வைத்திருப்பவர் அப்துல் ரஜாக். இவர் கடந்த 20ம் தேதி முத்துப்பேட்டை தர்ஹா கந்தூரி விழா அன்று தனது  கடை  முன்பு  சாலையில்  கிடந்த  ஒரு  கைபையை  கண்டெடுத்தார்.
அதனை  திறந்து பார்க்காமல் தனது மகனும், தவ்ஹீத் ஜமாத்தின் முன்னாள் மாவட்ட தலைவருமான அன்சாரியிடம் ஒப்படைத்து யாரும் தேடி வந்தால் கொடுத்து விடும்படி கூறியுள்ளார். அவரும் அதனை திறந்து பார்க்காமல் கடையில் ஒரு ஓரத்தில் வைத்துவிட்டார்.

இந்நிலையில் பணப்பையை கண்டெடுத்த அப்துல் ரெஜாக் மார்ச் ம தேதி மாரடைப்பால் மரணமடைந்துவிட்டார்.

நீண்ட நாட்கள் ஆகியும் யாரும் கேட்டு வராததால், நேற்று முன்தினம் அதனை அன்சாரி திறந்து பார்த்தபோது அதில் ₹ 500 கட்டுகள் கொண்ட  ₹ 40 ஆயிரம் இருந்தது தெரியவந்தது.

இதனால்  அதிர்ச்சியடைந்த அன்சாரி பைக்குள் பார்த்தபோது, நாகை மாவட்டம், திருப்பூண்டியில் உள்ள ஒரு வங்கிக்கு செலுத்த வேண்டிய ரசீது இருந்தது தெரியவந்தது. அதில் நாகை மாவட்டம் திருப்பூண்டியில் உள்ள வங்கிக்கு செலுத்த வேண்டிய ரஷீதும் இருந்தது.

இதனையடுத்து திருப்பூண்டி தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகளிடம் தொடர்பு கொண்டு  சம்மந்தப்பட்ட வங்கியிடம் விசாரித்தபோது திருப்பூண்டி உசேன் ஷா (60)  என்பருக்கு சொந்தமானது என்று தெரியவந்தது.

உடனே முத்துப்பேட்டை தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் உசேன்ஷாவை முத்துப்பேட்டைக்கு நேற்று வரவழைத்து அவரிடம் கைப்பை மற்றும் பணத்தை ஒப்படைத்தனர். உசேன் ஷா மகிழ்ச்சியுடன் அதைப் பெற்றுக்கொண்டார். இச்செய்தியை கேள்விப்பட்ட பொதுமக்கள் அன்சாரி மற்றும் தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகளை வெகுவாக பாராட்டினர்.

நன்றி:தமிழ் ஹிந்து

2 comments:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.