.

Pages

Tuesday, March 3, 2015

காதிர் முகைதீன் கல்லூரியில் 60 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா ! [ படங்கள் இணைப்பு ]

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் இன்று [ 03-03-2015 ] காலை 10.30 மணியளவில் கல்லூரியின் கலையரங்கில் 60 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியும், எம்.கே.என் ட்ரஸ்டின் நிர்வாகியுமான நீதிபதி கே. சம்பத் அவர்கள் தலைமையுரையும், திருச்சி மண்டல கல்லூரி இணை இயக்குனர் முனைவர் கே. கலா வாழ்த்துரையும் வழங்கி மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி கெளரவித்தனர். பல்வேறுப் பாடப்பிரிவுகளில் தரங்கள் மற்றும் பதக்கங்கள் பெற்ற மாணவ, மாணவிகள் உட்பட மொத்தம் 582 இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சி ஆகிய பிரிவுகளின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

பட்டங்கள் வழங்குவதற்கு முன்பாக மாணவ மாணவிகளுக்கான உறுதிமொழியை கல்லூரியின் முதல்வர் முனைவர் ஏ. ஜலால் அவர்கள் எடுத்தார். நிகழ்ச்சியில் கல்லூரி துணை முதல்வர் உதுமான் மொய்தீன், துறை சார்ந்த தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக ஆங்கிலத்துறை தலைவர் பேராசிரியர் முனைவர் ஏ. முஹம்மது மொய்தீன் வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியின் இறுதியில் கல்லுரியின் வணிகவியல் துறை பேராசிரியர் முனைவர் எம். சிக்கந்தர் பாதுஷா நன்றி கூறினார். நிகழ்ச்சிகள் அனைத்தையும் பேராசிரியை இ. பிளோமினா தொகுத்து வழங்கினார்.

விழாவில் சிறப்பு விருந்தினர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், பெற்றோர்கள், கல்லூரியின் பேராசிரியர்கள், அலுவலக ஆய்வகப் பணியாளர்கள், மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.