.

Pages

Tuesday, March 3, 2015

சாதனை படைத்த சவூதி மருத்துவர்கள் !

வயிறு ஓட்டி பிறந்த இரட்டை குழந்தைகளை சவூதி மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின் மூலம் வெற்றிகரமாய் பிரித்துள்ளனர். ஏமன் நாட்டை சேர்ந்த தம்பதியினருக்கு சில மாதங்களுக்கு முன் வயிறு ஒட்டியபடி இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது.

அப்துல்லா, அப்துல் ரகுமான் என்று பெயரிடப்பட்ட அந்த இரட்டை ஆண் குழந்தைகளை அறுவை சிகிச்சை மூலம் பிரிப்பதற்காக, அவர்களின் பெற்றோர் சவூதிக்கு அழைத்து வந்துள்ளனர்.

இதன்பின் அந்நாட்டு சுகாதார அமைச்சர் அப்துல்லா அல்-ரபியாவின் வழிகாட்டுதலின் படி, தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் அப்துல் அசீஸ் என்ற மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

சுமார் 9 மணி நேரமாக நடந்த இந்த அறுவை சிகிச்சையில், குழந்தைகளின் ஒட்டியிருந்த வயிறுகள், சிறுநீரக அமைப்புகள் மற்றும் இடுப்பு எலும்புகள் மிக கவனமாக பிரிக்கப்பட்டுள்ளன. மேலும் வெற்றிகரமாக பிரிக்கப்பட்ட குழந்தைகள் இருவரும், தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.