.

Pages

Sunday, March 1, 2015

சிங்கப்பூராக மாற இருக்கும் செக்கடி குளம் ! [ படங்கள் இணைப்பு ]

செக்கடி குளத்தை நவீன படுத்தும் முயற்சியில் அப்பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கடந்த சில மாதங்களாக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பணிகள் நடைபெற்று வந்தது. பெரும்பாலான பணிகள் நிறைவு பெரும் தருவாயில் இருக்கிறது. இந்நிலையில் உச்சகட்டமாக குளத்தை சுற்றி காணப்படும் நடைமேடை பகுதிகளில் டிசைன் தட்டுக்கள் புதைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழக அரசின் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்தும் வகையில் குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சேரும் மழைநீரை பைப் மூலம் குளத்திற்கு போய் சேரும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆங்காங்கே மின்விளக்குகள் ஏற்படுத்தவும் பைப் புதைக்கப்பட்டு வருகிறது. தற்போது இறுதி கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் அனைத்து பணிகளும் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் செக்கடி குளத்தின் இறுதி வடிவத்தின் மாதிரி புகைப்படங்கள் நமதூர் செக்கடி பள்ளியில் அனைவரின் பார்வைக்கு வைக்கப்பட்டது. உலகளவில் நவீன கட்டமைப்பிலும், தூய்மையிலும், சுகாதாரத்திலும் முன்மாதிரியாக திகழும் சிங்கப்பூரை போல செக்கடி குளத்தை சுற்றி காணப்படும் பகுதி தூய்மையிலும், நவீன கட்டமைப்பிலும் மாற இருப்பதை சுட்டிக்காட்டி மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர் அப்பகுதியினர்.
 
 
 
 
  

6 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    மிகவும் அருமையான முயற்சி, ரொம்ப நல்லா இருக்குது, நடைமேடை இவ்வளவு பாடுபட்டு, சிலவுகள் பல செய்து போடப்பட்டு வருகிறது, மெதுவாக நடந்தால் நல்லது, அழுத்தமாக நடந்தால் பித்த வெடிப்பு வலிக்கும்.

    மேலும் இது திறந்த வெளியாக இருப்பதால் வெகுவாக அசுத்தமடை அனேக வாய்ப்புகள் இருக்கின்றது. காக்கை பீ, நாய்ப் பீ, பூனைப் பீ, இன்னும் பல பீக்களால் நிறைய வாய்ப்புகள் உள்ளன.

    இந்த முயற்சியை இதோடு விட்டு விடாமல் ஒரு கல்யாண மண்டபத்தையும் கட்டலாம்.

    குளத்தைச் சுற்றி பத்து அடிக்கு ஒரு பில்லர் வீதம் போட்டு நன்றாக உயர்த்தி குறு நெடுக்குமாக பீம்கள் போட்டு ஒரு கல்யாண மண்டபத்தை கட்டினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.[காசு கடை கோஸு முஹம்மது பேரன்]
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- kmajamalmohamed@gmail.com

    ReplyDelete
  2. கல்யானமண்டபத்திற்க்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட ஊரில் இன்னும் பல நல்ல காரியங்கள் இருக்கின்றனர், உதாரணத்திற்க்கு வெளியில் சொல்ல வெட்கப்பட்டு தன் குமர்களை எப்படி கரையெற்றுவது என்று விழித்துக்கொண்டிருக்கும் பெற்றோர்கள், செல்வம் செழிக்கும் இதே அதிரையில் இருக்கிறார்கள்.

    நமதூர் நிரைந்து கானப்படும் இறையில்லம் இருக்க கல்யானமண்டபம் எதற்கு....?, இது தேவையற்றது, நமதூரில் மதரஸாக்கள் (பெண்கள் மற்றும் ஆண்கள்) பொழிவிழந்தும், கட்டிடம் மோசமாகவும் பராமறிப்பின்றி கானப்படுகின்றன அதை சீர் செய்யலாமல்லவா இது என் தனிப்பட்ட கருத்து.

    ReplyDelete
    Replies
    1. தம்பி,
      நமதூரில் தேவை இல்லாதது நடக்கின்றது காரணத்தினாலேயே, தேவையற்ற கல்யாண மண்டபத்தை தேவை போல் எழுதினேன்.

      Delete
    2. அதேதான் நானும் சொல்கிறேன் காக்கா

      தேவையற்றவையை போக்கி தேவையான பிற நல்ல காரியங்களை தேவையுள்ளவர்களுக்கு கொடுப்பதற்க்கான விழிப்புணர்வு நமதூருக்கு தேவையென்பதைதான் நான் அப்படி கூறினேன்.

      Delete
    3. இதை எப்படி செயல்படுத்தலாம்?
      விபரமாக சொல்லு தம்பி.

      Delete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.