அதிரை கீழத்தெருவின் பாரம்பர்யமிக்க பாட்டன் வீட்டு வகையராவைச் சேர்ந்தவர். காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் உதவி தலைமை ஆசிரியர் அலியார் சார் அவர்களின் மச்சான்.
இப்படி பன்முக அடையாளங்களுடன் உள்ள இவரைப் பற்றி ஜித்தாவில் அதிரையர் என்ற குறுகிய வட்டத்தில் இல்லாமல் 'இந்தியன் காக்கா' என்று பெருமையுடன் அழைத்தால்தான் எல்லோருக்கும் தெரியும். இவர் கடை வைத்திருந்த பகுதியில் ஏராளமான இந்தியர்களின் கடை இருந்தாலும், இந்தியன் ஸ்டோர் என்ற பெருமை இவரின் கடைக்கு மட்டுமே உண்டு.
இந்தியாவின் கேரள மாநிலத்தவர்கள் 80 சதவீதமும் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் 20 சதவிதமும் கோலோச்சும் ஷரஃபிய்யா பகுதியில் இவரின் கடைக்கு வரும் பல நாட்டு/மாநில வாடிக்கையாளர்கள் ஏராளம். காரணம் நேர்மை, நியாயம், தரமான பொருட்கள் முகம் சுழிக்காத தன்மை என அனைத்து மனித நற் குணங்களையும் தன்னகத்தே கொண்டவர்
சுமார் 36 ஆண்டு வெளிநாட்டு வாழ்க்கையில், 18 ஆண்டுகளாக இந்தியன் ஸ்டோர் என்ற இந்த கடையை சொந்தமாக நடத்தி வந்தாலும், கூலிக்குக் கூட ஆள் வைக்காமல் தனி ஆளாக உழைத்த உழைப்பாளி.
பிள்ளைகளெல்லாம் வளர்ந்து, அவரவர்கள் பணியில் அமர்ந்து உழைக்க தொடங்கிவிட, அவர்களுக்கும் திருமண வாழ்க்கை அமைத்துக் கொடுத்து, ஆண் பிள்ளைகளுக்கு வேலையும் அமைத்துக் கொடுத்து ஒரு தகப்பனாக அனைத்து பணிவிடைகளையும் செய்து இன்னும் உழைத்துக் கொண்டிருந்த வேளையில், வெளிநாட்டு வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைக்க நினைத்தார். அவரது பிள்ளைகளும் "போதும் வாப்பா நீங்கள் உழைத்தது, ஊரில் ஓய்வெடுங்கள்" என பணிக்க. கடந்த இரு தினங்களுக்கும் முன் அதிரைக்கு பயணமாகிவிட்டார்.
ஆனால் இவரிடம் பாசம் காட்டிய பல்வேறு நாட்டு, மாநில இவரின் வாடிக்கையாளர்களுக்கு இவரின் திடீர் ஊர் பயணம் சற்று சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளமை என்னவோ உண்மை.
இத்தனை வருட வெளிநாட்டு வாழ்க்கையில் வேறொரு முதலாளிக்கு அடிமை வாழ்க்கை வாழாமல், தனி ஆளாய் ஒரு கடைக்கு முதலாளியாய் இருந்தவர் என்ற் பெருமை இந்தியன் காக்காவுக்கு இருந்தது. அதேவேளை இவரைப் போன்று நமதூரைச் சேர்ந்த பிறரும் தொழில் செய்து முன்னேற வேண்டும். ஆனால் யார் தயாராக இருக்கிறார்? எல்லோரும் வேறொருவரிடம் கைகட்டி வேலை செய்யவே ஆசைப்படுகின்றனர்." என்ற ஆதங்கத்துடனேயே விடைபெற்றார்.
அப்துல் அஜீஸ்
ஜித்தா





Great man
ReplyDeleteஉங்களின் ரிட்டயர்மென்ட் வாழ்வு சிறக்க வாழ்த்துக்கள் ஊரில் சமுதாய பணி செய்து வாழ்வை வளமாக்குங்கள்
ReplyDeleteஎனது வகுப்புத் தோழர். பால்ய நண்பர். பார்த்து பல வருடங்களாகி விட்டன. . இன்ஷா அல்லாஹ் சந்திப்பேன்.
ReplyDeleteWe miss you in Sharafia kaka.
ReplyDeleteHe was the landmark of Adirain's.
அல்லாஹ் உங்களுக்கு உடல் ஆறோக்கியத்தை தருவானாக ஆமின்...
ReplyDelete