.

Pages

Thursday, March 12, 2015

புதிய தலைமுறை சென்னை அலுவலகம் மீது வெடிகுண்டு வீச்சு !

புதிய தலைமுறை சென்னை அலுவலகம் மீது அடையாளம் தெரியாத நபர்கள் இன்று அதிகாலை வெடிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர்.

அதிகாலை மூன்றேகால் மணியளவில் இந்த தாக்குதல் நடந்தது. அலுவலகத்தினை நோட்டமிட்டபடி, இரு சக்கர வாகனங்களில் சென்ற சிலர், சில நிமிடங்களில் திரும்பி வந்து, நுழைவுவாயிலின் அருகே நின்றனர். பின்னர் அடுத்தடுத்து இரண்டு டிபன்பாக்ஸ் குண்டுகளை வீசினர். இந்த குண்டுகள் அலுவலக நுழைவுவாயில் பகுதியில் வெடித்தன. இதுகுறித்து உடனடியாக கிண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், தடயங்களை சேகரித்தனர்.

2 டிபன் பாக்ஸ் குண்டுகளின் பாகங்களைக் கொண்டு வெடிகுண்டு நிபுணர்களும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த தாக்குதலில் பெரிய அளவில் சேதம் ஏதும் ஏற்படவில்லை. கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று புதிய தலைமுறை தொலைக்காட்சி ஊழியர்கள் மீது சமூக விரோதிகள் சிலர் தாக்குதல் நடத்திய நிலையில் இன்று வெடிகுண்டு வீச்சு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நன்றி:புதியதலைமுறை

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.