மாவட்டத்தில் குறைந்த வயதுடையவர்கள் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவது அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக, நகரப்பகுதிகளில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் விதிமுறைகளை மீறி குறைந்த வயதிலும், ஓட்டுநர் உரிமம் இல்லாமலும் இருசக்கர வாகனங்களை ஓட்டி வருகின்றனர். இதனால் விபத்துகள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது.
இதை கட்டுப்படுத்த, எஸ்.பி. ஜி.தர்மராஜன் முடிவு செய்துள்ளார். அதன்படி, போலீஸார் அடிக்கடி வாகன சோதனையில் ஈடுபட வேண்டும் என்று, காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டு அவர் தெரிவித்துள்ளதாவது:
காவல் துணை கண்காணிப்பாளர்கள் தங்கள் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அடிக்கடி வாகன சோதனை நடத்த வேண்டும். அப்போது சிறுவயதுடையவர்கள் இருசக்கர வாகனம் ஓட்டி வந்தால், அந்த வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும். அப்போது தான் அடுத்தமுறை, தகுந்த வயது வரும் வரை அவர்களின் பெற்றோர் இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதிக்க மாட்டார்கள். அதேபோல் முறையான ஆவணங்கள் இல்லாமல் வரும் இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்ய வேண்டும்.
இந்த நடவடிக்கையில் போலீஸார் எந்த தயக்கமும், தயவும் காட்டக்கூடாது. மாவட்டத்தில் பேருந்து படிக்கட்டில் நின்று பயணம் செய்பவர்கள் மீதும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீதும் போலீஸார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.தர்மராஜன்.
இந்த உத்தரவை போலீஸார் முறையாக அமலாக்கம் செய்தால் மட்டுமே விபத்துகளை கட்டுப்படுத்த முடியும்.

பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இந்த நடவடிக்கையில் போலீஸார் எந்த தயக்கமும், தயவும் காட்டக்கூடாது. மாவட்டத்தில் பேருந்து படிக்கட்டில் நின்று பயணம் செய்பவர்கள் மீதும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீதும் போலீஸார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.தர்மராஜன்.
இந்த உத்தரவை போலீஸார் முறையாக அமலாக்கம் செய்தால் மட்டுமே விபத்துகளை கட்டுப்படுத்த முடியும்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. (காசுக்கடை கோஸ் முஹம்மது பேரன்)
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com
வரவேற்கத்தக்க உத்தரவு, உண்மையாகவே இது நடைமுறைக்கு வர வேண்டும். ஏனெனில் பல போக்குவரத்து காவலர்களுக்கு முறைகேடாக சம்பாதிக்கும் வழியும் இதுவே.
ReplyDeleteமிகவும் வரவேற்கத்தக்க உத்தரவு !இந்த உத்தரவை போலீஸார் முறையாக அமலாக்கம் செய்தால் மட்டுமே விபத்துகளை கட்டுப்படுத்த முடியும்
ReplyDeleteமாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.தர்மராஜன். அவர்களுக்கு நன்றி ! நன்றி!!