இந்நிலையில் தஞ்சை மற்றும் சுற்று வட்டாரபகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பயன்பெரும் வகையில் புதிதாக ஆம்புலன்ஸ் வாகனத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அதன் நிர்வாகிகள் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தமுமுகவின் 119 வது ஆம்புலன்ஸ் அர்பணிப்பு விழா மற்றும் சமூக நல்லிணக்க பொதுக்கூட்டம் இன்று 13-03-2015 மாலை தஞ்சையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தமுமுக தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ஐ.எம் பாதுஷா தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக தமுமுக மூத்த தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ, தமுமுக பொது செயலாளர் அப்துல் சமது, மமக மாநில அமைப்பு செயலாளர் ராவுத்தர்ஷா ஆகியோர் கலந்து கொண்டு ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி வைத்து சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
முன்னதாக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அதிரை அஹமது ஹாஜா வரவேற்புரை ஆற்றினார். கூட்டத்தின் இறுதியில் தஞ்சை நகர தமுமுக செயலாளர் ஏ.எம் சித்திக் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.




தமிழக அரசுவையே பின்னுக்கு தள்ளி விடும் நம் இஸ்லாமியர்கள் சேவை TMMK ஆம்புலன்ஸ் மற்றும் TNTJ ரத்தம் தானம்.
ReplyDelete