.

Pages

Friday, March 13, 2015

அதிரை பேரூர் திமுக நிர்வாகிகள் அறிமுக கூட்டம் !

திமுக தலைமையகம் அதிரை பேரூர் நிர்வாகிகளின் பெயர்களை நேற்று முன்தினம் அறிவித்தது. இதையடுத்து திமுக அதிரை பேரூர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் இன்று இரவு நடைபெற்றது.

கூட்டத்திற்கு அதிரை பேரூர் அவைத்தலைவர் அப்துல் காதர் தலைமை வகித்து, வரவேற்புரை ஆற்றினார். அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.எச். அஸ்லம், பட்டுக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் பா. இராமநாதன், பேரூர் செயலாளர் இராம. குணசேகரன், மாவட்ட பிரதிநிதி மீராஷா ஆகியோர் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார்கள்.

கூட்டத்தில் திமுக தலைமை அறிவித்த அதிரை பேரூர் நிர்வாகிகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். கூட்டத்தின் தீர்மானங்களாக திமுக 14 வது அமைப்பு தேர்தல் முடிவினை ஏற்று அதிரை பேரூர் நிர்வாகிகளாக பணியாற்றிட வாய்ப்பு வழங்கிய திமுக தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோருக்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

திமுக பொருளாளர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. மேலும் பேரூரில் திமுக கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டது.

அதிரையின் அனைத்து வார்டுகளிலும் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது என்றும், வலிமையோடு பணியாற்றுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

2016 ம் ஆண்டு திமுக தலைவர் கலைஞர், பொருளாளர் ஸ்டாலின் ஆகியோரின் தலைமையின் கீழ் திமுக ஆட்சி அமைய ஒற்றுமையுடன் செயல்பட்டு அதிக வாக்குகள் பெற பாடுபடுவது என்றும், அதிரையில் விடுபட்ட வாக்காளர்களை சேர்ப்பது - போலி வாக்காளர்களை கண்டறிந்து நீக்க முயற்சிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் கடந்த ஆண்டுகளில் அதிரையின் பல்வேறு பகுதிகளில் மரணமடைந்த திமுகவினருக்கு ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

கூட்டத்தின் இறுதியில் பேரூர் துணை செயலாளர் தில்லை நாதன் நன்றி கூறினார். இதில் திமுக மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள், வார்டு நிர்வாகிகள், திமுக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 

1 comment:

  1. பள்ளத்தில் விழுந்த யானையாக காட்சி அளிக்கும் தி மு க வை வெளியே கொண்டுவரும் பளுதூக்கி Crane களாக இவர்கள் செயல்பட வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.