.

Pages

Saturday, March 7, 2015

இந்தியாவின் முதல் இஸ்லாமிய பெண் விமானி !

பழைய ஹைதரபாத் நகரைச் சேர்ந்த ரொட்டிக் கடையில் வேலை செய்து வருபவர் அஸ்ஃபாக் அகமது. இவரது மகள் சைதா சால்வா ஃபாத்திமா இன்று இஸ்லாமிய பெண்களுக்கு ஒரு எடுத்துக் காட்டாய் உள்ளார். இஸ்லாம் கூறும் ஹிஜாபின் ஊடாகவும் சாதனைகளை செய்ய முடியும் என்று உலகுக்கு சொல்லிக் கொண்டுள்ளார் ஃபாத்திமா!

வறுமையான குடும்பத்தில் பிறந்த ஃபாத்திமா தான் பள்ளியில் படிக்கும் காலங்களிலேயே ஆர்வ மிகுதியால் விமானம் சம்பந்தப்பட்ட செய்திகளை எல்லாம் சேகரித்து வருவாராம். இவரது அறிவையும் ஆற்றலையும் உணர்ந்த பல நல்ல உள்ளங்கள் இவரது படிப்பு செலவை ஏற்றுக் கொண்டன. ஐந்து வருடம் சிறப்பாக படித்து இன்று ஒரு பெண் விமானியாக வலம் வருகிறார் ஃபாத்திமா. Andra Pradesh Aviation Academy மூலமாக தனியார் விமான ஓட்டிக்கான சான்றிதழை மார்ச் 2003 அன்று பெற்றுக் கொண்டார். 200 மணி நேரம் விமானியாக பறந்து சாதனை நிகழ்த்தியுள்ளார். இவ்வளவு பெரிய படிப்பு படித்தும் தனது ஹிஜாபை இது வரை கழட்டவில்லை என்பதை நாம் நோக்க வேண்டும். இஸ்லாமிய கல்வி வேலை வாய்ப்பில் பெண்கள் முன்னேறுவதற்கு முக்காடு ஒரு தடையல்ல என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார். மேற்கொண்டு படிப்புக்காக இவருக்கு 30 லட்ச ரூபாய் தேவைப்படுகிறது. கூலி தொழிலாளியான இவரது தந்தையால் முடியாது. எனவே அரசு உதிவியினை எதிர் நோக்கி காத்துள்ளார். இவருக்கு உதவி கிடைக்கவும், இன்னும் எந்த உயரத்தை எட்டினாலும் இதே போல் இஸ்லாம் காட்டித் தந்த வழியில் நடைபோடவும் நாமும் பிரார்த்திப்போம்.

இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் விமானி என்ற பெருமயையும் ஃபாத்திமா பெறுகிறார்.

தகவல் உதவி
தி ஹிந்து ஆங்கில நாளிதழ்
06-03-2015

நன்றி: சுவனப்பிரியன்
படங்கள்:நியூஸ் மினிட்
 

1 comment:

  1. இந்த சகோதரிக்கு வாழ்த்துக்கள், எந்நேரமும் ஒரே நிய்யத்துடன் இருந்தால் மட்டும்தான் எல்லா வற்றையையும் காப்பாற்ற முடியும். இளம் வயசு, விண்ணில் பறப்பது, பல மக்களின் பழக்கம், அப்படியும் இப்படியுமான சூழ்நிலைகள்.

    இறையச்சம் இருந்தால் எல்லா வற்றையையும் சமாளித்து விடலாம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.