.

Pages

Monday, March 2, 2015

குப்பைகளை அப்புறப்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்த இருக்கும் அதிரை பேரூராட்சி !

அதிரை பேரூராட்சியின் தலைவராக எஸ்.எச் அஸ்லம் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு சுகாதார நடவடிக்கைகளில் ஆர்வத்துடன் தனிக்கவனம் செலுத்தி வருகிறார். அதிரை நகரில் அன்றாடம் சேருகின்ற குப்பைகளை அள்ளிச்செல்ல கூடுதலான வாகனங்கள் இல்லை என்ற குறை நீண்ட காலமாக இருந்து வந்தது. புதிதாக டிராக்டர் வாகனம் வாங்குவதற்கு அரசின் அனுமதி தேவைப்பட்டதால் இருக்கும் வாகனங்களை கொண்டு குப்பைகள் அள்ளப்பட்டு வந்தன.

இந்நிலையில் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நாள்தோறும் குமியும் குப்பைகளை அப்புறப்படுத்துவதில் பேரூராட்சி நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதிதாக ட்ரை சைக்கிள்கள் வாங்கி குப்பைகளை அள்ளுவது என முடிவு செய்யப்பட்டது. இதற்காக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், நடப்பு ஆண்டின் அதிரை பேரூராட்சி பொது நிதியிலிருந்து முதற்கட்டமாக 6 ட்ரை சைக்கிள்கள் வாங்கப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ₹ 146,000/- ஆகும். அடுத்தகட்டமாக இன்னும் 6 ட்ரை சைக்கிள்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இன்னும் சில தினங்களில் ட்ரை சைக்கிள்கள் மூலம் குப்பைகளை அள்ளிச்செல்லும் பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக சைக்கிள்கள் அனைத்தும் அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதிரையின் குறுகலான பகுதிகளிலும் ட்ரை சைக்கிள்களை கையாள்வதில் சிரமம் ஏதும் இருக்காது என்பதால் இதன் பயன்பாடுகள் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

4 comments:

  1. ஒவ்வொரு வண்டியும் 24,333.33 ரூபாய்க்குத் தான் வாங்கப்பட்டுள்ளது.

    ReplyDelete
  2. Very good you are the tiger of mathematics

    ReplyDelete
  3. பறவைகளாலும் விலங்குகளாலும் ஏன் குப்பைகளாலும் நோய்கள் பரவுவது எல்லோருக்கும் தெரியும் சமீபத்தில் பன்றி காய்ச்சல் அதிகமாக இந்தியாவில் பரவி வருகிறது, என்னமோ ஏதோ தெரியல பாலிவுட் நடிகை சோனம் கபூரையும் பன்றிக்காய்ச்சல் தாக்கியுள்ளது என்று ஆச்சரியமாக எழுதுறாங்க, இதுவரை நாடு முழுவதும் 19,046 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இதுவரை 1041 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெகத் பிரகாஷ் நட்டா பன்றிக் காய்ச்சல் குறித்து மக்கள் பீதி அடைய தேவை இல்லை என்று கூலாக சொல்கிறார் காரணம் நோய்க்கான பரிசோதனை மருந்துகள் அனுப்பி வைக்கப் பட்டுள்ளனவாம். இந்தியாவில் 1041 பேர் அதில் தமிழ்நாட்டில் 9 பேரு மண்டய போட்டதுப் பற்றி கவலை இல்லை, அமைச்சர் ஜெகத் பிரகாஷ் நட்டா பேச்சு நட்ராற்றில் விட்டது போல் உள்ளது.

    வருமுன் காப்போம் என்று சுகாதாரத்தை பேணுவோம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.