.

Pages

Saturday, March 7, 2015

கடற்கரை தெருவில் நீர்தேக்க தொட்டி அமைக்கும் பணி காலதாமதம் ஏன் ? சேனா மூனா விளக்கம் !

அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட கடற்கரை தெரு 8 வது வார்டு பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு அவ்வபோது நிலவி வரும். இந்த பகுதியில் குடிநீர் பற்றாக்குறையை போக்குவதற்காக குடிநீர் தேக்க தொட்டி அமைத்து தர வலியுறுத்தி இப்பகுதியில் வாழும் பல்வேறு தரப்பினர் சம்பந்தபட்டோரிடம் தொடர் கோரிக்கை வைத்து வந்தனர்.

இதுதொடர்பாக துபாயில் நேற்று நடைபெற்ற கடற்கரைதெரு அமீரக அமைப்பின் பொதுக்குழு கூட்டத்தில் குடிநீர் தேக்க தொட்டி துவங்கும் பணி தாமதமாவதை குறிப்பிட்டு அதிருப்தியை வெளியிட்டிருந்தனர்.

இதுகுறித்து அதிரை பேரூராட்சியின் 8 வது வார்டு உறுப்பினர் சேனா மூனா ஹாஜா முகைதீனை தொடர்புகொண்டு கேட்டபோது...
'கடற்கரைதெரு பகுதியில் குடிநீர் பற்றாக்குறையை போக்க குடிநீர் தேக்க தொட்டி கட்டுவது என்பது மஹல்லாவாசிகளின் நீண்ட நாள் திட்டம். இதற்காக நான் வார்டு கவுன்சிலராக பொறுப்பேற்று பிறகு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறேன். குறிப்பாக சம்பந்தபட்டோரிடம் முறையிட்டு வருகிறேன்.

குடிநீர் தேக்க தொட்டி அமைக்க 4 ஆயிரம் சதுர அடியில் நிலம் அரசிற்கு வழங்க வேண்டி இருக்கிறது. அப்போதுதான் குடிநீர் தேக்க தொட்டி அமைக்க முடியும். கடற்கரை தெரு பகுதியில் தர்ஹாக்கு சொந்தமான வக்ப் போர்டு நிலம் உள்ளது. இதில் ஒரு பகுதியில் நீர்தேக்க தொட்டி அமைக்க நிலம் வழங்க கோரி கடந்த [ 04-11-2014 ] அன்று அதிரைக்கு வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் தமிழ்மகன் உசேன் அவர்களிடம் கோரிக்கை மனு வழங்கினேன். அப்போது பரிசிலிப்பதாக கூறினார். நீர் தேக்க தொட்டி அமைக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறேன். இடம் கிடைப்பதில் தாமதமாவதால் நீர்தேக்க தொட்டி அமைக்கும் பணி காலதாமதமாகி வருகிறது' என்றார். 

4 comments:

  1. இந்த தீர்வின் பிரச்சனைகள் பற்றி 8 வது கவுன்சிலர் தம்பி சேன முன அவர்கள் அதிரை நியுஸ் சிற்கு கொடுத்த விளக்கம் அறிய பெற்றேன்.

    கடல் கரை தெருவிற்கு சற்றும் மேலே உள்ள இடங்களில் நீர் தேக்க தொட்டி அமைந்தால்தான் அந்த தெருவிற்கு முறையாக குடிநீர் கிடைக்கும் .

    இதற்கு தேவைப்படும் அந்த 4000 சதுர அடி நமதூரின் மிஸ்கீன் பள்ளியின் குளம் நமக்கு சாதகம் என்பதும் அடியேனின் கருத்து .

    ReplyDelete
  2. நீர் நிலை நிலம் இதற்கு பொருந்தாது,

    ReplyDelete
  3. எனது அருமை நண்பன் சேனா முனா ஹாஜா முஹைதீன் 8 வது வார்டில் தண்ணீர் தொட்டி கட்டுவதற்கு அதிரை பேரூர் ஆட்சி நிர்வாகத்திடமும் அது சமந்த பட்ட அரசு அதிகாரிகளிடமும் பல முயற்சிகளை செய்து வருவது எனக்கு நன்ற தெரியும் ஆனால் அவரது முயற்சியை அதிரை பேரூர் ஆட்சி நிர்வாகமும் அரசு அதிகாரிகளும் அலட்சியம் செய்வது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது

    ReplyDelete
    Replies
    1. என்ன அது!, சேனா மூனா காக்கா அவர்களின் முயற்சியை அரசு அலட்ச்சியப்படுத்துகிறதா? நம்பவே முடியவில்லையே.

      சேர்மன் காக்காவை அரசு அலட்ச்சியப்படுத்துகிறது என்று ஊரே சொல்லுகிறது, காரணம் இவர் திமுக. மேலே அதிமுக.

      ஆனால், சேனா மூனா காக்கா அதிமுக தானே. அதனால்தானே அந்த வார்டுக்கு மட்டும் இலவச பொருட்கள் வழங்கப்பட்டன.

      தண்ணீர் தொட்டி வருவது உறுதி, காலதாமதத்துக்கு காரணம் வேறு ஏதாவது இருக்கலாம்.

      சேனா மூனா காக்காவுக்கு தெரியாதது என்ன இருக்கு.?

      Delete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.