.

Pages

Thursday, March 5, 2015

போலி ஆவணம் மூலம் அமெரிக்க விசா பெற முயற்சி: இருவர் கைது !

போலி ஆவணங்கள் மூலம் சென்னையில் உள்ள அமெரிக்கத் துணை தூதரகத்தில் விசா பெற முயன்றதாக பெங்களூரு, குஜராத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு பேலஸ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் வீ.பிரசாத் (44). குஜராத் மாநிலம் பவணாபுரா பகுதியைச் சேர்ந்தவர் கூ. ரஜினிகாந்த் வால்மீகி (39). இவர்கள் இருவரும் சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தில் விசா பெறுவதற்கு விண்ணப்பித்திருந்தனர். இதற்கான நேர்முகத் தேர்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது இருவரின் ஆவணங்களை தூதரக அதிகாரிகள் சரிபார்த்ததில், அவர்களின் பாஸ்போர்ட் தவிர மற்ற அனைத்து ஆவணங்களும் போலியானவை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இருவரையும் ராயப்பேட்டை காவல்நிலையத்தில் ஒப்படைத்து, புகார் செய்தனர். போலீஸார் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து, கைது செய்தனர்.

விசாரணையில் பிரசாத்துக்கு பெங்களூருவைச் சேர்ந்த தரகர் கோட்டீஸ்வரராவும், ரஜினிகாந்த்துக்கு குஜராத்தைச் சேர்ந்த தரகர் முகேஷ்பாயும் போலி ஆவணங்கள் தயார் செய்து கொடுத்திருப்பது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

நன்றி: தினமணி

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.