.

Pages

Monday, March 9, 2015

ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பேரூராட்சி பாராபட்ச நடவடிக்கை: எஸ்.டி.பி.ஐ கட்சி குற்றச்சாட்டு!

முத்துப்பேட்டையில் திருத்துறைப்பூண்டி தொகுதி எஸ்.டி.பி.ஐ கட்சி கூட்டம் முத்துப்பேட்டை நகர அலுவலகத்தில் நேற்று மாவட்ட பொதுச்செயளாலர் நெய்னா முஹம்மது தலைமையில் நடைப்பெற்றது. இதில் வருகின்ற 12-ந்தேதி அன்று எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் நடைப்பெறவுள்ள லஞ்ச ஊழலுக்கு எதிராகவும் மற்றும் தமிழகத்தில் லோக் ஆயூக்தாவை அமல் படுத்த கோரியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டத்திற்கு பெறுந்திரளாக மக்களை கொண்டு செல்வோம் எனவும் மேலும் முத்துப்பேட்டை பட்டரை குளம் ஆக்கிரமிப்பு அகற்றும் விசயத்தில் ஒருத்தலை பட்சமாக நடந்துக்கொண்ட முத்துப்பேட்டை பேரூராட்சி நிர்வாகம் மற்றும் அரசு அதிகாரிகளை எஸ்.டி.பி.ஐ கட்சி வன்மையாக கன்டிக்கிறது.

மேலும் முத்துப்பேட்டை பேரூராட்சி துப்புரவு தொழிலாளர்களை அப்புரவுப்படுத்துவதற்க்கு முன் அவர்களுக்கு பட்டாவுடன் கூடிய இடங்களை வளங்குமாறு எஸ்.டி.பி.ஐ கட்சி வலியுறுத்துகிறது இவ்வாறு கூட்டத்தில் தீர்மாணம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மற்றும் தொகுதி பொருப்பாளர் ஷேக் தாவூது, முத்துப்பேட்டை நகர தலைவர் ஷேக் மைதீன், நாச்சிக்குளம் பொறுப்பாளர் தமீம் அன்சாரி, கட்டிமேடு கிளை பொறுப்பாளர் ஷேக் முகம்மது மற்றும் பல முக்கிய செயல் வீரர்கள் கலந்துக்கொண்டனர்.

செய்தி மற்றும் படம்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.