.

Pages

Monday, March 9, 2015

தஞ்சை மாவட்ட அனைத்து வட்டங்களிலும் இ-சேவை மையம் அமைப்பு: பயன்படுத்தி கொள்ள பொதுமக்களுக்கு அழைப்பு!

தஞ்சை மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் இ சேவை மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டுமென கலெக்டர் சுப்பையன் தெரிவித்துள்ளார்.

தஞ்சை கலெக்டர் சுப்பையன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தஞ்சை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வட்டங்களிலும் பொது இ சேவை மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

இச் சேவை மையங்கள் மூலம் வருமான சான்றிதழ், வகுப்பு சான்றிதழ், இருப்பிட சான் றிதழ், கணவனால் கைவிடப்பட்ட பெண்  சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ், தமிழக முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதியுதவி திட்டம், ஈவெரா மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதியுதவி திட்டம், டாக்டர். தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவி திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதியு தவி திட்டம் ஆகிய திட்டங்களுக்கு மின் ஆளுமை அரசு சேவை வழங்கப்படுகிறது.

இணையதளத்தில் விண்ணப்பித்த பின் சான்றிதழ்கள் தயாரானதும் மனுதாரருடைய அலைபேசிக்கு குறுந்தகவல் அனுப்பப்படும். இத்தகவல் கிடைத்தவுடன் மனுதாரர் தாசில்தார் அலுவலகம் சென்று சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.

இப்போது இ சேவை மையம் தஞ்சாவூர் தாசில் தார் அலுவலகத்தில் கடந்த பிப்ரவரி 24ம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. இதேபோல் திருவையாறு, பூதலூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி தாசில்தார் அலுவலகங்களிலும், கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் கடந்த 1ம் தேதி முதல் இ சேவை மையங்கள் செயல் பட துவங்கியுள்ளது. மேலும் மாவட்டத்தில் அனைத்து வட்ட அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் இம்மையம் செயல்படும். எனவே பொதுமக்கள் இச்சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் சுப்பையன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.