தஞ்சை மாவட்ட கலெக்டர் சுப்பையன் உத்தரவுப்படியும், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் டாக்டர் சுப்பிரமணி வழிகாட்டுதல்படியும் பட்டுக்கோட்டை வட்டாரப் பகுதிகளில் உள்ள கல்லூரி, பள்ளிகளில் பன்றிக் காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் மற்றும் சுகாதார முறைப்படி கை கழுவும் முறைகள் பற்றிய பயிற்சி முகாம்கள் நடைபெற்றது.
தஞ்சை மாவட்ட சுகாதாரத்துறை மற்றும் ஜேசிஐ. பட்டுக்கோட்டை விங்ஸ் சார்பில் இம்முகாம் நடைபெற்றது. பட்டுக்கோட்டை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அறிவழகன் தலைமை வகித்தார். நாட்டுச்சாலை, தாமரங்கோட்டை, ராஜாமடம், ஏனாதி, நம்பிவயல், கரம்பயம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள், இளநிலை பூச்சியியல் வல்லுநர் வேலுச்சாமி மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் முகாமில் கலந்து கொண்டனர்.
தம்பிக்கோட்டை வைரமணி, ராமசாமி பாலிடெக்னிக் கல்லூரி, சுக்கிரன்பட்டி பிருந்தாவன் மேல்நிலைப்பள்ளி, தாமரங்கோட்டை ஸ்ரீகுமரன் கல்வியியல் கல்லூரி, சஞ்சாயநகர் புனித தாமஸ் உயர்நிலைப்பள்ளி, அதிரை அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி, அதிரை காதர் முகைதீன் பெண்கள் உயர்நிலைப்பள்ளி, கழுகப்புலிக்காடு அரசு உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றில் பன்றிக்காய்ச்சல் பற்றியும், சுகாதாரமான முறையில் கை கழுவும் முறை பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.
முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அறிவழகன் பேசுகையில்...
பன்றிக்காய்ச்சல் வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது. சளி, இருமல், காய்ச்சல், தும்மல், தலைவலி மற்றும் தொண்டைவலி இந்நோய் தொற்றின் அறிகுறிகளாகும். சிலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கும் இருக்கலாம். பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் இருமும் போதும், தும்மும் போதும் வெளிப்படும் நீர்த் திவலைகள் மூலம் இந்நோய் கிருமிகள் காற்றில் பரவுகிறது. இந்த நீர்த் திவலைகள் படிந்த பொருட்களை தொடும்போது கைகளில் இந்த கிருமி ஒட்டிக் கொள்கிறது.
கைகளை கழுவாமல் கண்கள், மூக்கு, வாயை தொடும்போது கிருமி தொற்று ஏற்படுகிறது. பன்றிகளில் இருந்து மனிதர்களுக்கு தொற்று ஏற்படுவதில்லை. நோய் பரவாமல் தடுக்க கைகளை அடிக்கடி சோப்பு போட்டு நன்கு கழுவ வேண்டும். காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களிடமிருந்து ஒரு மீட்டர் இடைவெளி விட்டு இருக்க வேண்டும். எந்த காய்ச்சல் ஏற்பட்டாலும் சுய மருத்துவம் செய்து கொள்ளக் கூடாது. மருத்துவரை அணுக வேண்டும். ஓசல்டாமிவிர் என்ற சக்தி வாய்ந்த மாத்திரைகள் உள்ளது. காய்ச்சல் ஏற்பட்டால் ஓய்வாக வீட்டில் இருக்க வேண்டும். இருமும் போதும், தும்மும் போதும் கைக்குட்டையால் அல்லது துணியால் முகத்தை மூடிக் கொள்ள வேண்டும் என்றார். மாணவ, மாணவிகளுக்கு கை கழுவும் பயிற்சி அளிக்கப்பட்டது. மாணவ, மாணவிகளுக்கு பன்றிக்காய்ச்சல் பற்றி விழிப்புணர்வு வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது.வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஜே.சி.ஐ. பட்டுக்கோட்டை விங்ஸ் தலைவர் வெங்கடேஷ் பரிசுகளை வழங்கினார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் விவேகானந்தம் நன்றி கூறினார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.