.

Pages

Friday, March 13, 2015

குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்: 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு!

முத்துப்பேட்டை அடுத்த குன்னலூர் ஊராட்சியை சேர்ந்த பண்ணைபொது, எக்கல், கடம்பைவிளாகம், விநோபா பகுதியில் கடந்த ஒருமாதமாக குடிநீர் வரவில்லை எனக்கூறி நேற்று காலை பாண்டி கடைதெருவில் ஊராட்சி மன்ற ஊறுப்பினர் முத்துமாணிக்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகி வீரமணி ஆகியோர் தலைமையில் பெண்கள் உட்பட சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இதனால் திருத்துறைப்பூண்டி – முத்துப்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருத்துறைப்பூண்டி தாசில்தார் மதியழகன், மாவட்ட ஊராட்சி தலைவி ஜெயலட்சுமி அம்பிகாபதி மற்றும் போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர் சாலை மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உடன் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாவட்ட ஊராட்சி தலைவர் நிதியிலிருந்து விரைவில் அப்பகுதியில் குடிநீருக்காக சுமார் 1500 மீட்டர் தூரம் பைப் அமைக்கப்படும் என்றும் அவர்கள் உறுதி கூறியதால் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் சாலை மறியலை விளக்கி கொண்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

செய்தி மற்றும் படம்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.