அதிரை கடற்கரை தெரு அமீரக அமைப்பின் பொதுக்குழு கூட்டம் 06-03-2015 வெள்ளிக்கிழமை அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு துபாயில் உள்ள சகோதரர் அன்வர் அவர்களுடைய இல்லத்தில் மாஷா அல்லாஹ் மிக சிறப்பான முறையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏராளமான கடற்கரை தெரு முஹல்லா வாசிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
கூட்டத்தில் கலந்து ஆலோசிக்கப்பட்ட முக்கிய தீர்மானம்:
கடற்கரை தெரு 8வது வார்டில் அடிக்கடி நிகழும் தண்ணீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய தண்ணிர் தொட்டி கட்டுவதே நிரந்தர தீர்வு என்பதால், தண்ணீர் தொட்டி கட்டி தரப்படும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் தான் அதிரை கடற்கரை தெரு அமீரக அமைப்பு சேனா முனாவை ( ஹாஜா முகைதீன் ) போட்டி இன்றி தேர்வு செய்ய ஆதரவு அளித்தது, ஆனால் இதுவரைக்கும் எந்த ஒரு முயற்சியும் எடுக்கப்படாததால் கடற்கரை தெரு அமீரக அமைப்பு தனது அதிருப்தியை தெரிவித்து கொள்வதோடு 8வது உறுப்பினரிடம் ( சேனா முனாவிடம் ) உரிய விளக்கத்தை விரைவாக அளிக்குமாறு கோரியுள்ளது.
.jpg)




இந்த தீர்வின் பிரச்சனைகள் பற்றி 8 வது கவுன்சிலர் தம்பி சேன முன அவர்கள் அதிரை நியுஸ் சிற்கு கொடுத்த விளக்கம் அறிய பெற்றேன்.
ReplyDeleteகடல் கரை தெருவிற்கு சற்றும் மேலே உள்ள இடங்களில் நீர் தேக்க தொட்டி அமைந்தால்தான் அந்த தெருவிற்கு முறையாக குடிநீர் கிடைக்கும் .
இதற்கு தேவைப்படும் அந்த 4000 சதுர அடி நமதூரின் மிஸ்கீன் பள்ளியின் குளம் நமக்கு சாதகம் என்பதும் அடியேனின் கருத்து .
எனது அருமை நண்பன் சேனா முனா ஹாஜா முஹைதீன் 8 வது வார்டில் தண்ணீர் தொட்டி கட்டுவதற்கு அதிரை பேரூர் ஆட்சி நிர்வாகத்திடமும் அது சமந்த பட்ட அரசு அதிகாரிகளிடமும் பல முயற்சிகளை செய்து வருவது எனக்கு நன்ற தெரியும் ஆனால் அவரது முயற்சியை அதிரை பேரூர் ஆட்சி நிர்வாகமும் அரசு அதிகாரிகளும் அலட்சியம் செய்வது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது
ReplyDeleteM.JAHIR HUSSAIN
BEACH STREET
======================================================
அமீரக கடற்கரை தெரு சகோதரர்களே, தண்ணீர் தொட்டியை இன்னும் நிறுவவில்லையே என்ற கருத்து உங்கள் பார்வையில் இருக்கின்றது. அதாவது இன்னும் அகப்பை இல்லையே என்ற கருத்து.
ReplyDeleteதற்போது ஊரில் உள்ள அனைத்து குளங்களும் வற்ற தொடங்கி விட்டன, எப்படியும் ஒரு மாதம்தான் தாக்கு பிடிக்கும், அப்புறம் பானையே காலியாக கிடக்கும், பிறகு “தில்லா லங்கடி கொங்கா” டான்சுதான் நடக்கும்.
முதலில் ஊருக்கு தண்ணீர் வருவதுக்கு தீர்மானம் எடுங்கள்.