திருச்சி விமான நிலையம் வழியாக அண்மைக்காலமாக தங்கம் கடத்துவது அதிகரித்துள்ளது. மேலும், திருச்சி வரும் பயணிகளிடம் அவர்கள் கொண்டு வரும் பொருட்களுக்கு முறையாக வரிகள் விதிக்கப்படுவதில்லை எனவும், முறைகேடாக ரொக்கம் பெற்றுக்கொண்டு ஏராளமான பொருட்களை வெளியே எடுத்துச்செல்ல அனுமதிப்பதாகவும் சுங்கத் துறையினர் மீது புகார்கள் சென்றன.
இதையடுத்து, வெள்ளிக்கிழமை அதிகாலை சுங்கத் துறையில் சிங்கப்பூர் மற்றும் மலேசிய நாட்டு விமானங்கள் வந்து சோதனை முடித்து பயணிகள் தங்கள் உடைமைகளுடன் வெளியே வந்த நேரத்தில், சிபிஐ உதவி ஆணையர் லாசர் தலைமையில், 10 பேர் கொண்ட குழுவினர் திடீரென திருச்சி விமான நிலையத்துக்குள் நுழைந்தனர். அவர்கள் சுங்கத் துறையில் அன்றையதினம் பயன்படுத்திய ரசீது புத்தகம், வசூலான வரி, அபராத தொகை ஆகியவற்றை எடுத்துக்கொண்டதோடு, ரூ. 3 லட்சம் ரொக்கத்தை கைப்பற்றியதாகவும் விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
கணக்குகளை ரசீது புத்தகத்துடன் ஒப்பிட்டு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். வியாழக்கிழமை நள்ளிரவு தொடங்கிய ஆய்வு வெள்ளிக்கிழமை காலை வரை நீடித்தது. இதைத்தொடர்ந்து, பணியிலிருந்த சுங்கத் துறை பணியாளர்களின் வீடுகளிலும் வெள்ளிக்கிழமை சோதனை தொடர்ந்தது.
நன்றி:தினமணி

எல்லோருக்கும் தெரிந்தது தான் ஊழல் பண்ணும் அதிகாரிகள் நேரடியா பண்ண மாட்டானுக ஏஜென்ட் வச்சிக்குவான். அப்பாவிகளை போட்டு வறுத்து எடுப்பாணுக. திருச்சி விமான நிலையத்தில் மேலதிகாரிகள் ஆசிர்வாதம் நிறையவே கீழ் உள்ளவர்களுக்கு உண்டுங்க, கப்பம் சரியாக கட்டாததால் இந்த அதிரடி விசாரணை, அப்படி வருபவர்கள் மப்டில வந்து சோதனை நடத்தனும், வீட்டில் சோதனை போட்டதில் என்னத்தை கண்டு புடிச்சி இருக்காங்கன்னு தெரியல்ல, எல்லாம் மேல் உள்ளவனுக்கு வெளிச்சம்.
ReplyDelete