.

Pages

Sunday, March 8, 2015

அதிரையில் முதியோர்கள் கணக்கெடுக்கும் பணியை வீடு வீடாகச் சென்று சேகரிக்க முடிவு !

அதிரையில் வாழும் முதியோர்களை மாதமொருமுறை ஒருங்கிணைக்கவும், இவர்களுக்கு தேவைப்படும் மருத்துவ உதவியை வழங்கவும் அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.எச் அஸ்லம் தலைமையில் சமூக ஆர்வலர்கள் அடங்கிய குழுவினர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக நமதூர் செக்கடி பள்ளியில் கலந்தாலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் அதிரையில் வாழும் முதியோர்களை இனங்கான வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணி நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. மேலும் தொடர்பு கொள்ள இலகுவாக முதியோர்கள் குறித்து சேகரிக்கும் தகவல்களை படிவத்தில் நிரப்புவது என முடிவு செய்யப்பட்டது. இன்றைய கூட்டத்தில் அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம், எம்.எஸ் அமீன், எம்.எஸ் தமீம், அனஸ், சிங்கம் அமீன், ஏரோ வேர்ல்ட் மொய்தீன், தாரிக், சுஹைப், தமீம் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.
 
 
 

7 comments:

  1. சொத்துக்கு பங்கு போடும் பிள்ளைகள் .கேட்பாரற்று கிடக்கும் பெற்றோர்கள் .ஆண்பிளைகளை பெற்ற பெற்றோர்கள் தனக்கு நல்ல மருமகள் வரமாட்டாள என்ற எதிர்பார்ப்பிலும் பெண்பிள்ளைகளை மட்டும் பெற்ற பெற்றோர்கள் தனக்கு நல்ல மருமகன்கள் வரமாட்டார்களா நம்மை கவனிக்க மாட்டார்களா என்ற எதிர்பார்ப்பிலும் இருக்கும் தருணங்களில் கல்யாணம் முடித்த உடனேயே கணவனும் மனைவியும் சேர்ந்து தனது பெற்றோர்களை தனியே விட்டு விட்டு வெளிநாடு சென்று விடுகின்றனர் .

    போகிற போக்கை பார்த்தால் வளர்ந்த நாடுகளில் மேலும் குறிப்பாக இஸ்லாமிய அரபு நாடுகளில் கூட இதற்காக தனியாக மருத்துவ மனைகளும் செவிலியர்களும் இயக்கபடுகின்றனர் .காலப்போக்கில் இந்நிலைமை நமதூரிலும் கூட ஏற்படலாம்.

    நான் வெளிநாடுகளில் இருந்து ஊர் வரும்போது சிலர் காண கிடைக்காததால் அவர்கள் இறந்துவிட்டதாக கூட என்ன தோன்றும் ஆனால் அவர்கள் வீட்டினுள் முடங்கி கிடப்பதும் எப்போதாவது அவர்களின் மரண செய்திகள் கேள்விப்படும்போதும் இவர்களெல்லாம் இன்னும் உயிரோடுதான் இருந்துள்ளனர் அவர்கள் இருக்கும் போது நம்மால் இவர்களை எல்லாம் சந்திக்க முடியாமல் போய்விட்டதே என்று நான் ஆதங்க பட்டதும் உண்டு.

    இவர்கள் ஒன்று கூடும் பட்சத்தில் பல அறிய தகவல்களை நம்மால் பெறமுடியும் .
    அல்லாஹ் போதுமானவன் .தம்பி சேர்மன் அஸ்லாமின் இந்த முயற்சிக்கு தெரு பாகுபாடற்ற ஊர் மக்கள் அனைவரின் ஒத்துழைப்பு அவசியம் தேவை
    பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. கனவு வீட்டை கட்டிவிட்டு அதற்க்கு தன் தாயார் பெயரைவோ அல்லது ரஹ்மத் இல்லம் ஆயிஷா இல்லம், பரக்கத் இல்லம் இப்படி பெயரை சூட்டிவிட்டு வெளிநாடு போய்விடுகின்றார்கள், அவர்களின் பெற்றோர்களுக்கு அதுவே முதிவோர் இல்லமாக மாறிவிடுகிறது, தனியாக ஏன் இருக்கிறீர்கள் என்று கேட்டால் தன் பிள்ளை பற்றி பல குறைகளை சொல்லிக் காண்பிக்கிறார்கள். வேலைக்கு ஆள்வைத்து கவனிக்கும் அவலநிலைக்கு தள்ளப் படுகிறார்கள் என்பது வேதனை. மகனிடம் காரணம் கேட்டால் அவர்களும் தன் பெற்றோர் மீது அடுக்கடுக்கா குறைகளை வைக்கிறார்கள்.

    ஆண்பிள்ளை இல்லாத பெரியவர்கள் வீட்டில் அவர்களுக்கு மருத்துவ வசதி பெரிய ????? தான். இரவில் ஆட்டோ அழைத்தால் " அவரு இப்பதான் மாத்திரை போட்டு தூங்குறாரு " அல்லது "அவருக்கு உடம்பு சரி இல்லை " அல்லது " இப்ப தான் வெளிவுறு சவாரி போயிட்டு அலுப்பா படுத்துகிடக்கிராறு " என்று எதிர்முனையில் பதில் வரும். இதற்கும் ஒரு தீர்வு காண வேண்டும்.

    நல்ல முயற்சி எடுத்து இருக்கிறீர்கள் வெற்றி பெறட்டும் - வாழ்த்துக்கள்.

    ReplyDelete

  3. நல்ல முயற்சி எடுத்து இருக்கிறீர்கள் வெற்றி பெறட்டும் - வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. முதியோர் நலனுக்காக இப்படியொரு ஒருங்கிணைப்பு தற்போதைய சூழ்நிலையில் அவசியமாக த்தான் இருக்கிறது. காரணம்

    சொந்தபந்தம் ஆயிரம் இருந்ததும்
    சொகுசுக்காரில் ஏறிச் சென்றும்
    சோறுகாஞ்சி கிடைச்சபோதும்
    சாய்ந்துறங்க இடமிருந்தும்
    மனசுவிட்டு நாலு வார்த்தை
    பேச நாதி யாரிருக்கா
    மனங்குளிர பேசிமகிழ
    மன்றம் ஒன்று தேவைதானே

    [ நமக்கும் பிற்காலத்தில் தேவைப் படலாம் ]

    .

    ReplyDelete
  5. பதிவுக்கு நன்றி.

    முதியோர்களை அரவணைக்க அதிரையில் மட்டும் இல்லை, அகில உலகமுழுக்க ஆட்கள் தேவை. மேலும் மற்றவர்கள் அரவணைப்பதைக் காட்டிலும் பெற்றெடுத்த பிள்ளளகள், பேரக்குழந்தைகள், சொந்தங்கள், குடும்பங்கள் அரவணைப்பதையே எல்லா முதியவர்களும் விரும்புவார்கள்.

    முதியர்வர்களை ஒருங்கிணைத்து கவுன்சிலிங் கொடுப்பதை விட, அந்த முதியவர்கள் எந்தெந்த குடும்பத்தை சார்ந்தவர்கள் என்பதை தீர கண்டறிந்து, குடும்பத்தார்களுக்கு இஸ்லாம் சொன்ன வழிகளை கூறி கவுன்சிலிங் கொடுத்தால்தான் சாலச் சிறந்ததுவாக இருக்கமுடியும்.

    முதியவர்கள் என்ன புதியதாக வானத்திலிருந்து குதித்து வந்தவர்களா? இன்றைய குழந்தைகள் நாளை முதியர்வர்கள் இதுதானே விதி, இந்த விதி வாழையடி வாழையாக வந்து கொண்டு இருக்கின்றது. அப்படி வளர்ந்த வாழை தன்வயதை அடைந்ததும் விதிப்படி இறந்து விடுகிறது. இறக்கும்வரை அந்த வாழைக் குடும்பத்தார்கள் முதிர்ந்த வாழையை வெறுப்பதில்லை.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.[காசு கடை கோஸு முஹம்மது பேரன்]
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- kmajamalmohamed@gmail.com

    ReplyDelete
  6. நல்ல முயற்சி எடுத்து இருக்கிறீர்கள் வெற்றி பெறட்டும் - வாழ்த்துக்கள்.


    ReplyDelete
  7. நல்ல முயற்சி பாரட்டுக்குள், மேலும் நமது ஊரில் முதியோர்களில் ஆண்களைவிட பெண்கள் 3 மடங்கு அதிமாக உள்ளனர்.. குறிப்பாக பெண் முதியவர்களை அதிக கவனம் செலுத்தி அவர்களின் நல்வாழ்வுக்கு முயற்சி எடுக்க சமூக ஆர்வலர்களை கேட்டுக்கொள்கிறேன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.