.

Pages

Wednesday, March 4, 2015

கோர்ட் உத்தரவுபடி ஆக்கிரமிப்புகள் அகற்றம்: பேரூராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை !

முத்துபேட்டை பழைய பேருந்து நிலையம் அருகே மிக பெரிய பரப்பளவில் பட்டரைக்குளம் உள்ளது. இதில் சுற்று புறமும் தனியார் ஆக்கிரமிப்பு செய்ததால் குளம் சுருங்கி குட்டையாக மாறிவருகிறது. மேலும் குளத்திற்கு தண்ணீர் வரும் வாய்களையும் தனியார் ஆக்கிரமித்தால் தண்ணீர் வர தடைப்பட்டு குளம் வரண்டு போகி இதனால் சுமார் 5 வருடங்களுக்கு மேல் குளம் மக்கள் பயன் பாட்டில் இல்லாமல் போனது. இந்த நிலையில் சென்ற ஆண்டு பேரூராட்சி நிர்வாகம் மக்கள் பயன் பாட்டில் இல்லாத இந்த பட்டரை குளத்திற்கு 29 லட்சம் நிதி ஒதுக்கீட்டு செய்து குளத்துக்குள் ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு வசதியாக தடுப்பு சுவர் மற்றும் படித்துறைகள் நல்லநிலையில் இருந்தும் அதனை இடித்து பணிகளை மேற்கொண்டனர். இதனை எதிர்த்து முத்துப்பேட்டை சமூக ஆர்வலர் முகமது மாலிக் என்பவர் கடந்தாண்டு சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி சென்ற டிசம்பர் 6-ந்தேதிக்குள் பேரூராட்சி நிர்வாகம் பட்டரைக்குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அகற்ற வேண்டும் என உத்தரவிட்டார். இதற்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் 3 மாதக்காலம் அவகாசம் கோரியது அதனையும் ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் அன்றைய தினமே பேரூராட்சி நிர்வாகம் பிப்ரவரி மாதம் இறுதிக்குள் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றிவிட்டு வருகிற மார்ச் 15-ந்தேதிக்குள் நீதிமன்றதில் ஆதாரங்களை ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி பேரூராட்சி நிர்வாகம் பட்டரைக்குளத்தை அளவீடு செய்து 59 ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோடீஸ் அனுப்பியது. இதில் பேரூராட்சியில் பணி புரியும் துப்பரவு தொழிலாளர்களின் வீடுகள் முழுவதும் அகற்றும் நிலை ஏற்ப்பட்டது. ஆனால் யாரும் தங்களது ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்வரவில்லை. இந்த நிலையில் கடந்த வாரம் பேரூராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு மீண்டும் இறுதி நோடீஸ் அனுப்பியும் அவர்கள் யாரும் கண்டுக் கொல்லாததால் நேற்று காலை திருத்துறைப்பூண்டி தாசில்தார் மதியழகன், தஞ்சை பேரூராட்சியில் துணை இயக்குனர் மணி, செயல் அலுவலர் சித்தி விநாயக மூர்த்தி ஆகியோர் முன்னிலையில் வருவாய் ஆய்வாளர் முருகேசன், கிராம நிர்வாக அலுவலர்கள் பாலமுருகன், தினேஷ் குமார், கிருஷ்ணகுமார் ஆகியோர் மேற்பார்வையில், முத்துப்பேட்டை டி.எஸ்.பி.அருண், இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீஸ் பாதுகாப்புடன் பணியாளர்கள் ஜெ.சி.பி இயந்திரங்களைக் கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றத் தொடங்கி பணி தொடர்ந்து நடந்து வருகிறது. முதலில் பள்ளிவாசல் பக்கம் ஆக்கிரமிப்பை அகற்ற முயன்ற போது பலர் எதிர்ப்பு தொவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் ஆக்கிரமிப்பை அகற்றுவதில் ஒருதலைப்பட்சமாகவும், சிலருக்கு பேரூராட்சி நிர்வாகம் சாதகமாக அலந்து விட்டுக் கொடுத்துள்ளதாகவும், இதனை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நன்கு ஆய்வு செய்து நியாயமாக பாராபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பலரும் கருத்துத் தெரிவித்தனர். இந்த நடவடிக்கையில் பலரது கட்டிடங்கள், கோவில் போன்றவை முழுமையாக பாதிக்கப்படுவதால், முத்துப்பேட்டையில் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை
 

1 comment:

  1. முத்துப்பேட்டை சமூக ஆர்வலர் முகமது மாலிக் பொது நல வழக்கு கடந்தாண்டு சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றிக் கண்டுள்ளார்; ஊரை அடித்து உலையில் போடும் அரசியல்வாதிகள் மிரட்டலுக்கு பணியாமல் ,வாய்சவடால் இல்லாமல்நினைத்ததை செய்துக் காட்டியுள்ளார், வாழ்த்துக்கள்.

    நம்மவூரில் பள்ளிவாசல் சொத்துக்கள் ரொம்ப பேரு ஆக்கிரமித்து அனுபவித்து வருகிறார்கள், மக்களுக்கு தெரிந்தும் அதனை எதிர்க்காமல் இருபது வேதனை படவேண்டிய விசயம். முத்துப்பேட்டை சமூக ஆர்வலர் முகமது மாலிக் போல் இங்கே சிலர் செயல்பட்டாலும் அவருக்கு ஆதரவு இல்லை, வேரப்படி மீட்டடுக்க முடியும்?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.