இந்தியன் சோசியல் ஃபோரம் ஜித்தா தமிழ் பிரிவு கடந்த 27.02.2015 வெள்ளி மாலை ஜித்தா ஷரபிய்யா லக்கி தர்பார் ரெஸ்டாரென்;ட் அரங்கில் அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியையொட்டி மாணவர்களுக்கு இந்திய வரலாறு குறித்து கேள்வி - பதில் போட்டி நடத்தப் பட்டது. இதில் அதிரையைச் சேர்ந்த சிறுவன் இம்ரான் (த/பெ. தாஜுத்தீன்) முதல் பரிசை தட்டிச் சென்றார்.
முன்னதாக இந்நிகழ்ச்சிக்கு மேற்கு மாகாண சோசியல் ஃபோரத்தின் மத்திய கமிட்டி உறுப்பினர் பைசுத்தீன் தலைமை வகித்தார். மவ்லவி நூருல் அமீன் உலவி அவர்கள் திருமறை வசனங்களை ஓதி விழிப்புணர்வு கூட்டத்தினை துவக்கிவைத்தார். சோசியல் ஃபோரம் உறுப்பினர் உவைஸ் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.
சோசியல் ஃபோரத்தின் மேற்கு மாகாண மத்திய கமிட்டி உறுப்பினர் பைசுத்தீன் அவர்கள் சோசியல் ஃபோரம் குறித்து அறிமுகவுரை வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து இந்திய தன்னார்வ தொண்டு நிறுவனமான இந்தியா ஃபெடர்னிடி ஃபோரத்தின் ஜித்தா தமிழ் பிரிவு தலைவர் கே ஐ எம் ஷரீப் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.
எஸ்.டி.பி.ஐ கட்சியின் தமிழ் மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முஹைதீன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு “’’எதிர்கால இந்தியா’’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.
விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தின் நினைவுபரிசினை நிஜாம் முஹைதீன் அவர்களுக்கு பைசுத்தீன் அவர்கள் வழங்கினார்கள். கே ஐ எம் ஷரீப் அவர்களுக்கு சோசியல் ஃபேராம் ஷரபியிய்யா கிளைத் தலைவர் பசீர் அஹமது அவர்கள் வழங்கினார்கள். சோசியல் ஃபோரத்தின் ஜித்தா மாகாண துணைத்தலைவர் ரபீக் நன்றியுரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியனைத்தையும் சோசியல் ஃபோரத்தின் செயற்குழு உறுப்பினர் அமீர் சுல்தான் அவர்கள் நெறிபடுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் ஆண்கள், பெண்கள் மற்றுமு; மாணவ மாணிவிகள் உட்பட முன்னூற்றுக்கும் மேற்பபட்ட நபர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். வந்திருந்தோர் அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாஷா அல்லாஹ்,
ReplyDeleteமாஷா அல்லாஹ்,
ReplyDeleteAssalamu alaikum imran ,,, MASHA ALLAH GOOD
ReplyDeleteMasha allah super imran
ReplyDelete