அதிரையில் கடந்த இரண்டு வருடமாக அதிரையர்களால் உருவாக்கப்பட்ட ரஹ்மத் ரோடுவேஸ் நிறுவனத்தின் ஒரு ஆம்னி பேருந்து எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு உயிர் சேதம், காயங்களும் ஏற்பட்டது அனைவரும் அறிந்த உண்மை.இனிவரும் காலங்களில் இது போன்ற விபத்துக்கள் நடக்காமல் இருக்க அல்லாஹ் அனைவரையும் பாதுக்காப்பான. ஆமீன். மேலும் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு மன நிம்மதியையும், காயம் அடைந்தவர்களுக்கு உடல் நலன் பெற அல்லாஹ்வுடன் துஆ செய்வோமாக.ஆமீன்
எங்களுடைய ரஹ்மத் ரோடு வேஸ் நிறுவனத்தின் அதிரை சேவை முற்றிலுமாக நிறுத்தப்படுகிறது. காரணம் எங்களது நிறுவனத்தின் அதிரை சேவையை நிறுத்துமாறு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களின் சிலர் தொடர் வற்புறத்தனினாலும், மிரட்டனினாலும், சில துண்டு பிரசுரங்களை வெளியிட்டு விபத்தை காரணம் காட்டி இல்லாத அவபெயர்களை ஏற்படுத்தி அதிரை பொதுமக்களிடையே எங்கள் மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் எங்களது பேருந்தில் முறையான ஆவணங்கள் இல்லை என்றும், கடந்த காலங்களில் எங்களது பேருந்தில் சிறிய பழுதுகள் ஏற்பட்டாலும் அதனை பெரிய விபத்துபோல் காரணம் காட்டி இணையதளங்களில் வெளியிட்டு வந்தனர். ஆகையால் ரஹ்மத் அதிரை சேவையை இன்று முதல் முற்றிலுமாக நிறுத்துகிறது.
ரஹ்மத் நிறுவனம் உருவாக்கிய நோக்கம் அதிரையர்கள் யாரும் மோட்டார் தொழிலில் செய்ய முன்வராத நிலையில் அதிரை மக்களுக்கு நல்ல முறையில் சேவை செய்ய இந்த பேருந்து தொழிலில் இறங்கினோம்,மேலும் பொருளாதார நெருக்கடி இருந்தும் வட்டியின் பக்கம் செல்லாமல் அல்லாஹ்வின் உதவியால் செயல்பட்டோம். ஆனால் எதிர்பாராத விபத்தினை காரணம் காட்டி தொடர் மிரட்டல்களும் எங்களது நிறுவனத்திற்கு நெருக்கடி கொடுக்கும் சிலராலும் மற்றும் நிறுவனத்தின் மீது அவப்பெயர் எற்படுவதனாலும் எங்களது சேவை நிறுத்தப்பட்டது. அதிரை பொருத்தமட்டில் வெளியூர்காரர்கள் வந்து பிழைக்கலாம். உள்ளூர் வாசிகள் பிழைப்பது கடினம் என்பதை இந்த இரண்டு வருடத்தில் நாங்கள் நன்றாக தெரிந்து கொண்டோம்.
அதிரையில் இனி வரும் காலங்களில் எங்களை போன்ற இளைஞர்கள் இந்த மோட்டார் தொழிலை உருவாகலாம். அவர்களை உதாசினப்படுத்தாமல் ஊக்குவிக்குமாறும் அன்புடன் கேட்டுகொள்கிறோம். மேலும் எங்களது நிறுவனத்திற்கு ஒத்துழைப்பும் ஆதரவும் தந்த தொழில் சார்ந்த நிறுவனங்களும், வியாபாரிகளும், பொதுமக்களுக்கும் நன்றி மற்றும் சலாதினை தெருவித்து கொள்கிறோம்.
ரஹ்மத் ரோடு வேஸ்
No 6/4, Jaffer Serang Street,
Near National Hospital
Chennai - 600 001
Phone : +91-44-2525 1021 | 1022 | 1023
Fax : +91-44-2525 1024
cell : +91- 9840015690
Email: rahmathroadways@gmail.com
Web : rahmathbus.com
மிகவும் வருத்தம் தரக்கூடிய முடிவு.
ReplyDeleteமோட்டார் தொழில் மட்டுமல்ல. எல்லா தொளிகளிலும் நெருக்கடி ஏற்படுவது சகஜம். இவற்றை சமாளிக்க தெரிந்தவர்கள்தான் தொழிலில் முன்னுக்கு வந்துள்ளனர். ஒரே ஒரு தடவை ஏற்பட்ட விபத்தால் மோட்டார் தொழிலை விட்டு விடப்போகிறோம் என கூறுவது உங்கள் மீது நம்பிக்கை இல்லாததை காட்டுகிறது.
பிறரை குறை கூறுவதும் ஏற்படையது அல்ல. குறிப்பாக ஊரையும், இணையதளங்களையும்... ங்கள் புதிதாக தொழில் தொடங்கும் போது இணையதளங்கள் மூலம் தான் இலவசமாக் உங்கள் தொழில் குறித்து பிறரிடம் எத்தி வைக்கப்பட்டது. அதே போல் ஊரை குறை கூறுவதும் நமது ஊரை நாமே கேவலப்படுத்துவது போல் இருக்கிறது.
இனிவரும் காலங்களில் நீங்கள் ஆரம்பிக்கும் புதிய தொழில் நெருக்கடி இல்லாத வகையில், இலகுவாக இருந்திட அல்லாஹ்விடம் துவா செய்கிறோம் ஆமீன்
விபத்துக்கள் நாம் வேண்டிப் பெறுவதல்ல. அல்லாஹ் பெரியவன்.
ReplyDeleteஇப்படிப் பட்ட சோதனைகளைத் தாங்கி எழுந்து நிற்பதே நல்லது. அதற்காக சர்வீசை நிறுத்தும் முடிவு வருந்தத் தக்கது.
மறு பரிசீலனை செய்யலாம். இன்ஷா அல்லாஹ்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
விபத்துக்கள் விதியினாலும், கவனக் குறைவுனாலும் ஏற்படுவதே.
நடந்து முடிந்த விபத்து விதியா அல்லது கவனக் குறைவா.
பலமுறை ஆழ்ந்து சிந்திதித்து பார்த்தாலும் விடை கிடைப்பது அரிது.
முடிந்தது முடிந்து விட்டது, ஆனால் தாங்கிக்கொள்ள முடியாதது.
மறப்பதற்கு பல வருடங்கள் ஆகும், நினைக்கும் போதெல்லாம் மனது கனத்து இருக்கும். அல்லாஹ் அவர்களுக்கு தாங்கிக் கொள்ள தயை செய்வானாக- ஆமீன்.
இனிமேல் மக்கள் மனது தாங்கும் அளவுக்கு நடந்து கொள்வதே நிர்வாகத்தின் திறமை.
மீண்டும் ஒரு முறை ஆழ்ந்து சிந்தித்து பாருங்கள்! இப்போது விடை கிடைக்கும்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.[காசு கடை கோஸு முஹம்மது பேரன்]
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- kmajamalmohamed@gmail.com
அப்பாஸ் ஜாஹ் காக்கா உங்களுடைய கருத்துக்கு மிக்க நன்றி.மேலும் உங்களுக்கு எங்களுடைய நிலைமையை தெளிவு இப்படுத்த விரும்புகின்றேன்.
ReplyDeleteநாங்கள் இந்த விபத்தின் காரணமாக மட்டும் அதிரை சேவையை நிறுத்தவில்லை.விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் உள்ளுரில் இயங்கும் ஏஜென்ட்கள் மீது ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி கொண்டு அவர்களை மனம் புண்படி திட்டுவதும்,மிரட்டல் தொனியில் பேசி வருகிறார்கள்.
நாங்கள் உள்ளுரில் உள்ள இணையதளங்களை குறை குறைவில்லை.மாறாக எங்களது நிறுவனத்தின் பேருந்து சிறிய பழுது ஏற்பட்டாலும் அதனை முகநூளில், வாட்ஸ் அப் பதிவாக இட்டு எங்கள் மீது அவபெயரை ஏற்படுத்தி வந்தனர். இது போல் நமதுருக்கு அன்றாடம் செல்லகூடிய வாகனம் பழுதுகள் ஏற்பட்டு பலரும் ரோட்டில் நின்றனர் .ஊரில் அக்கறை உள்ள மனிதர் அதனை பதிவாக இடாமல் இருந்தது ஏனோ. ஊரில் உள்ளவர்களே தொழிலுக்கு எதிரியாக இருந்தால் சகோதரே ஊரில் பிழைப்பது கடினம் என்பதை நாங்கள் உணர்ந்து விட்டோம்.
வருத்தமளிக்ககூடிய விஷயம், விபத்தினால் உயிரிலந்தவர்கள் குடும்பத்திற்க்கு அழ்ந்த வருத்தினையிம், பேரிழப்பாகவும், மனதில் நீங்காமல் நிலைத்து நிர்க்கும், விபத்துகள் நடப்பது எதிர்பாராத விதத்தில் ஏற்ப்படக்கூடியது யாரும் வேண்டுமென்று நடக்காத செயல், இதனால் நன்றாக இயங்கிக்கொண்டிருந்த அதிரை-சென்னை சர்வீஸ் முடக்குவது சற்று வருத்தம் தருகின்றது.
ReplyDeleteமேலே குறிப்பிட்டுள்ள சகோ.அப்பாஸ் அவர்களின் கருத்தை நானும் வழிமொழிகிறேன்..
மோசமான சம்பவங்கள் அடிக்கடி நடந்ததினால்தான் அவர்களாகவே இந்த சேவையை நிறுத்தி விட்டார்கள். மனித உயிர்களை காவு வாங்கும் அளவுக்கு ஓட்டுனர்களை வைத்திருந்தது அவர்களின் தவறு. திருந்த முயற்சி செய்தால் நல்லது.
ReplyDelete.சகோதரே புரட்சி மின்னல்
Deleteநீங்கள் சொல்வது போல் இந்த பேருந்தில் அபாயாகரமான ஓட்டுனர்கள் இருந்ததாக நான் கேள்வி படவில்லை. நமதூரில் இயங்கும் மற்ற பேருந்துகளில் சிலவற்றில் பேருந்து ஓட்டுனர்கள் வேகமாக செல்வதும் பெண்கள் அஞ்சுவதும் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது.இன்னும் சொல்லபோனால் பேருந்தில் ஏறும் பெண்களை தவறான இச்சையில் பார்ப்பதுமாக நமது ஊரில் இயங்கும் பேருந்துகள் போவது பலருக்கும் தெரியாது
எதிர்பாராமல் நடப்பது தான் விபத்து, 227 சைனீஸ் உடன் மாயமான மலேசியா விமானம் அதன் சீனா சேவை நிறுத்தப்பட்டதா? மாநிலத்தில் ஆங்காங்கே நடக்கும் சாலை விபத்தால் மீண்டும் நடக்காமளா இருக்கு? இவ்வளவு ஏன் நம்மவூர் பள்ளியில் ஒரு மாணவன் இறந்ததற்காக பள்ளியை மூடிவிட்டார்களா? இல்லையே!
ReplyDeleteவிபத்து நடந்தால் அதற்க்கான இழப்பீடு ( Blood money ) நிர்வாகம் கொடுத்தாக வேண்டும் அதற்காக தான் காப்பீடு செய்கிறார்கள் இல்லையென்றால் வழக்கு பதிவு செய்யப்பட்டு நஷ்டஈடு பெறுகிறார்கள் -இது தானே மோட்டார் வாகன சட்டம் சொல்லுது. இந்த சட்டமாவது பரவாயில்லை இனி சாலை விபத்து ஏற்பட்டால் ரோடு போட்டவர்கள் தான் இழப்பீடு வழங்க வேண்டும் என்று புது சட்டம் கொண்டுவரப் போறாங்க ,யாரை? எங்கே போய் பார்க்க முடியும்?
உள்ளுற்காரர்கள் தொழில் செய்வதால் இந்த மிரட்டல் ஆனால் மற்றவர்களாக இருந்தால் வானத்துக்கும் பூமிக்கும் நம் மக்கள் குதிக்க மாட்டார்கள்.
மார்கெட்டில்; மீனை செவில் தூக்கி பார்த்து வாங்கும் நாம் நெடுந்தூர பயணம் மேற்கொள்ளும்போது வாகன கண்டிஷன் எப்படி என்பதை பார்க்க தவறுகிறோம்.
அதிக கஷ்டங்களை கடந்து செல்பவர்கள் தான் வெற்றியாளர்கள். எல்லோருக்கும் நல்ல பயணமாக அமைய இறைவனிடம் வேண்டுவோம்!