.

Pages

Saturday, May 2, 2015

அதிரையில் நுங்கு சீசன் துவங்கியது: ₹10 க்கு, 5 சுளைகள் !

கோடை காலத்தில் மக்களின் சூட்டைத் தணிக்கும் நுங்கு சீசன் அதிரையில் துவங்கியுள்ளது. அதிரையை சுற்றி காணப்படுகிற மகிழங்கோட்டை, தொக்காளிகாடு, பழஞ்சூர், மளவேனிற்காடு, ராசியங்காடு, மஞ்சவயல் உள்ளிட்ட கிராம பகுதியிலிருந்து நுங்குகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

தற்போது கோடை வெப்பம் துவங்கியதை அடுத்து பொதுமக்களின் தாகத்தை தீர்ப்பதற்காக அதிரையின் பிராதான பகுதியாக கருதப்படுகிற தக்வா பள்ளி, பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் நுங்கு விற்பனை களைகட்டியுள்ளது.

பொதுமக்களும் வாகனத்தில் பயணம் செய்வோரும் நுங்கு சுளைகளை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.  ₹ 10 க்கு, 5 சுளைகள் வீதம் விற்க்கப்படுகிறது. இந்த பகுதியில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் நுங்குகள் 1-மணி நேரத்தில் முழுவதுமாக விற்று தீர்ந்துவிடுவதாக நுங்கு வியாபாரிகள் கூறுகின்றனர்.
 

5 comments:

  1. நொங்கு சாப்பிட்டு பல வருசங்களாச்சு. பாக்கபாக்க ஆசெயாத்தான் ஈக்கிது. பிரியமானவங்க யாராச்சும் துபாய் வரும்போது வாங்கி கொண்டுவந்து தந்தால் நம்ம ஆசெ நெறவேறும்.

    ReplyDelete
    Replies
    1. இந்தியன் பதிவுத் தபாலில் போட்டால் சரியாக வருபா, ஒரு வேளை துபாய் அரபிகளுக்கு இது ஒரு மாதிரியாக தெரியுமே, ஒரு சமயம் இது குளோனிங்கில் உள்ள குழந்தையோ என்று நினைத்து விட்டால்!? அப்புறம் உங்களுக்கு..................!????????????????

      Delete
  2. Lulu Hypermaket ல் கிடைக்கும் - முயற்சி பண்ணி ஆசையை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. என்னதான் சூப்பர்மார்கெட்ல விக்கிற நொங்கெ வாங்கி சாப்பிட்டாலும் நம்மூரு சூப்பர் நொங்கு போல் வருமா.!?

      Delete
  3. நுங்கு 10 ரூபாய் சரி இழநி ஏவுலது ஒரு பிக்சர் ல பார்தேன்
    அதன் சொன்னன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.