.

Pages

Saturday, May 2, 2015

ஊர் வளர்ச்சியில் நமது பங்கு !


முன்பொருகாலத்தில் வாழ்ந்த நமது முன்னோர்கள் எவ்விதபாகுபாடுமின்றி ஊர் நலனுக்காக எத்தனையோ பொதுச் சேவைகள் செய்து இருக்கிறார்கள் எவ்வளவோ நல்ல விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அக்கரைகாட்டி நமது ஊருக்காக நல்லபல பயனுள்ளவைகளைச் செய்து இருக்கிறார்கள்.அதையொட்டி சுற்றுவட்டார கிராம மக்களும் பயனடைந்து இருக்கிறார்கள்.

ஆனால் இந்தகாலகட்டத்தில் உள்ளதுபோல அன்று இத்தனை உட்பிரிவுகள் ஈகோ ஏதும் இல்லாமல் நமது சமுதாயம் நமது மக்கள் என்ற பார்வையும் சுயநலமில்லாத நல்ல நோக்கம் மட்டும்தான் இருந்தது. பொதுமக்களுக்கும் ஊரின்மீதும் அக்கறையும் இருந்தது.

ஆனால் அன்றிருந்தவைகளெல்லாம் இன்று எங்கோ சென்று ஓடிமறைந்து விட்டது. ஒற்றுமையாய் வாழ்வது என்பதெல்லாம் எட்டாக் கனியாகிக் கொண்டிருக்கிறது. நாளடைவில் ஒருத்தருக்கொருத்தர் புரிந்துணர்வு இல்லாமல் நம்மனதில் விஷச் செடிகள் வளர்ந்து மனித நேயத்தை சாகடித்து நம்மை பிரித்துக் கொண்டிருக்கிறது என்பது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாக இருக்கிறது.

மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்று சொல்வதுபோல மனம் வைத்து நாம் ஊர் நலன்கருதி ஊருக்கு ஒரு பிரச்சனையென்றால் அனைவரும் பாகுபாடின்றி கைகோர்த்து ஓரணியாய் நிற்ப்பதுதான் பலம் சேர்ப்பதாக இருக்கும். இப்படி பல பிரிவினைகள் நமக்குள் பல்கிப் பெருத்ததுதான் மிச்சம். அன்று எந்த ஒரு வித்தியாசமும் இல்லாமல் செய்த நற்காரியங்களை ஊர் நலன்களை இப்போது இத்தனை வித்தியாசங்களுக்குள் மக்களின் மனம் போனபடியால் ஒன்றும் ஊருக்கு உருப்படியாய் செய்தபாடில்லை. செய்யவும் நாதியில்லாமல் போய்விட்டது என்பதுதான் உண்மை. அப்படியே யாராவது எதையாவது செய்ய முன்வந்தாலும் அதில் குறைகாண்பதில் தான் கவனம் செலுத்துகிறார்கள். இந்தப்போக்கு முதலில் அனைவர்களின் மனதிலிருந்து மாறவேண்டும்.
 
அதுமட்டுமல்ல. அனைவரிடத்திலும். காசுபணம் பெருகப் பெருக அத்தோடு பல தலைக் கணங்களும், விரோத மனப்பான்மையும் உருவாகி இறுதியில் நமக்குள் நீயா நானா? நீ பெரியவனா? நான் பெரியவனா? என்கிற போட்டி வந்து தலைவிரித்தாட ஆரம்பித்து விட்டதுதான் இன்றைய நிலையில் உச்சகட்ட நிலையாக இருக்கிறது. இந்த நிலையைப் போக்குவதற்கு நாம் அனைவரும் மனத்தால் ஒன்றுபடவேண்டும். மனத்தால் ஒன்றுபடுவதாக இருந்தால் முதலில் நமக்குள் சில திருத்தங்களை செய்து கொள்ள வேண்டும்.

1, ஊர் வளர்ச்சியடைய வேண்டுமென்றால் முதலில் நமக்குள் நீயா நானா? என்கிற நிலை மாறவேண்டும்.

2, 
ஊர் நலனில் பொதுச் சேவைகளில் பாகுபாடின்றி எல்லோரிடத்திலும் அக்கரை இருக்கவேண்டும். 

3, 
யார் எந்தக் கட்சி எந்த அமைப்பை சார்ந்து இருந்தாலும் ஊருக்கு ஏதாவது ஒரு காரியம் ஆக வேண்டுமென்றால் அனைவரும் ஓர் அணியில் கைகோர்த்து நிற்க்க வேண்டும்.

4, 
ஒவ்வொரு முஹல்லாவாசிகளும் அவரவர் தலைமையை மதித்து அவர்கள் சொல்லும் ஆலோசனைக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.

5, 
தனிப்பட்ட எந்த ஒரு சொந்தப் பிரச்சனையையும் அரசியலாக்கி தெருப் பிரச்சனை ஊர்ப்பிரச்சனை என்று ஆக்கி விடக்கூடாது.

6, 
தெருவாரியாக வேற்றுமை பார்ப்பதை மனதிலிருந்து அடியோடு அறுத்து வீச வேண்டும்.

7, 
ஜாதிமத பேதமில்லாமல் அக்கம்பக்கத்து கிராம மக்களையும் அரவணைத்து அவர்களுக்கும் நம்மால் இயன்ற உதவியை செய்ய வேண்டும்..

இப்படி நாம் அனைத்து விஷயங்களிலும் பேணி நடந்து வந்தொமேயானால் நம்ம ஊர் இந்த பூமியில் தலை சிறந்த பூமியாக அனைத்து வசதிகளுக்கும் பஞ்சமில்லாத ஊராக அமைதிப் பூங்காவாக திகழும் என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை.

வறுமையில் நம் முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்த ஒற்றுமை இப்போது ஓரளவு வசதிவாய்ப்பை பெற்றதும் நமக்குள்ளான ஒற்றுமை தூர விலகிச் சென்று கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் ஈகோ எனும் காழ்ப்புணர்ச்சியே காரணமாக இருக்கிறது. அடுத்து சுயநலம் தலைதூக்கி விட்டது. இவைகள் அனைத்தையும் ஒவ்வொருவரது மனதிலிருந்து களைந்து எறிந்தால்தான்  நாம் ஒன்றுபட்டு வாழமுடியும்.! நாம் ஒன்றுபடுவோமா...!?!?

இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. (மர்ஹூம்) கோ.முஹம்மது அலியார்

12 comments:

  1. இன்றய கால கட்டத்திற்கு மிஹவும் அவசியம் நன்றி ஜமால் காக்கா

    ReplyDelete
    Replies
    1. அவசியம் என்றாலும் மக்கள் அவசியமற்று இருக்கின்றனர்.

      Delete
  2. ஜமால் காக்காவின் ஆதங்கம் நியாயமானதே.! ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. என்று சொல்வது போல வேற்றுமை களைந்து ஒற்றுமையெனும் கயிற்றை பற்றிப்பிடிக்க அதிரையர்கள் நலனுக்காக ஒன்றுபடுவார்களா.? அப்படி ஒன்று பட்டால் நாம் பலம் மிகுந்த அதிரையர்களாக பேசப்படுவோம்.

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அழைக்கும் எம்.எம்.எஸ் குடும்பம் மேலதெரு என்ற குறுகிய வட்டத்துக்குள் சுருக்கி விடஆமல் எம்,எம்,எஸ்,குடும்பம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அதிரையின் குடும்பமாக தான் செயல்பட்டு வருகிறது .மர்ஹூம் அரபாக்கா... மர்ஹூம் ,AMS ,... மர்ஹூம் AJ ஜபாராக்கா ....,மர்ஹூம் மம்தம்பி ஹாஜியார்,.... மர்ஹூம் ஷைக் தம்பி ஹாஜியார் ......,மர்ஹூம் ரஹ்மதுல்லா ஹாஜியார். ......மர்ஹூம் எம்.எம்.சம்சுதீன் ஹாஜியார் மர்ஹூம் ஜனாப் த அ செய்மொகம்மது காகா....,,,,, மர்ஹூம் த அ ...மர்ஹூம் மன்னார் அப்துல் காதராக்கா ... மர்ஹூம் செய்யதலி மறைக்கா .....மர்ஹூம் குத்தூசாக்க ,...ஜனாப் இக்பால் ஹாஜியார் . ....ஜனாப் அ.ஜ வக்கீல் ரசாக் ஹாஜியார்..... .ஜனாப் ஷைக் அலி மரைக்கார் ஜனாப் த்ரீ எம் ஹசன் ஹாஜியார் .மர்ஹூம் ஜனாப் கோ மு சாகுல் ஹமீத் காக்க மர்ஹூம் ஜனாப் கோ மு அலியாராக்கா .ஜனாப் கோ மு ஷேகாதி யாக்கா ........பழன்ஜெட்டி தெரு சண்முக தேவர் அவர்கள் சேர்மன் வாடி பன்னீர் செட்டியார் அவர்கள் ......கரையூர் தெரு சின்னையா பிள்ளை (வக்கீல் மரவன்பிள்ளையின் தந்தையார் ) அணைத்து அதிரை பிரமுகர்களுடனும் ஒரு குடும்பமாகதான் எம்.எம்.எஸ்.குடும்பம் அன்றிலிருந்து இன்றுவரை பழகி வருகிறது இதில் வேற்றுமையே இல்லை.மேற்சொன்னவர்களின் ஆலோசனை இல்லாமல் எந்த ஒரு காரியத்தையும் எம்.எம்.எஸ் குடும்பம் செய்ததில்லை ..அதிரைக்கு அரசு மருத்துவமனை ....கால்நடை மருத்துவமனை குடிநீர் தேக்கம் தண்ணீர் தொட்டி அனைத்துமே மர்ஹூம் எம்.எம்.எஸ் ஷைக் தாவூத் மரைக்கார் கொண்டுவந்ததே ...ஜனாப் kma ஜமால் காக்கா உங்களுக்கு தெரியாதா .இன்றளவும் அதிரைக்கு 24 மணி நேர மருத்துவ மனை வர எம்.எம்.எஸ் குடும்பம் தங்களாலான முயற்சிகளை எடுத்து கொண்டுதான் இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. மக்களுக்கு என்ன தெரியாது, எல்லாமே மக்களுக்கு தெரியும்., எல்லோருக்கும் எல்லாம் தெரியும், எல்லோரும் எல்லாம் தெரிந்து வைத்து இருக்கின்றனர்., மக்கள் எப்போதும் வலமையான புத்தியுடன் இருந்து வருகின்றனர்.

      ஆனால், பாழாப்போன பணத்திற்கு முன்பு ஆறறிவு இருந்தது, அதே பணத்திற்கு இப்போது இரண்டு அறிவு தான் இருக்குது. அன்று ஆறறிவு பெற்ற பணம் இடம் அறிந்து இருந்தது, இன்று இரண்டு அறிவு உள்ள பணம் இடம் அறியாமல் இருக்கின்றது.

      இதுதான் இன்றைய மனிதனுக்கும் பணத்திற்கும் இடையில் உள்ள குழப்பம்.

      என்ன செய்வது, காலம் பதில் சொல்லும்.

      Delete
  4. ஜமால் காக்காவின் ஆதங்கம் நியாயமானதே.! ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. என்று சொல்வது போல வேற்றுமை களைந்து ஒற்றுமையெனும் கயிற்றை பற்றிப்பிடிக்க அதிரையர்கள் நலனுக்காக ஒன்றுபடுவார்களா.? அப்படி ஒன்று பட்டால் நாம் பலம் மிகுந்த அதிரையர்களாக பேசப்படுவோம். இன்ஷா அல்லாஹ்

    ReplyDelete
  5. பதவிக்கு மட்டும் தான் அதிரை அணைத்து முஹல்லா கூட்டமைப்பா ?
    Posted by அதிரை எக்ஸ்பிரஸ் on 5/01/2015 07:23:00 PM in a-adirai | 4 கருத்துக்கள்
    அதிரையில் உள்ள அணைத்து முஹல்லா கூட்டமைப்பு கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் தொடங்க ப்பட்டது .இதன் தலைவராக ஹாஜி. ஜனாப் MMS சேக் நசுருதீன் அவர்கள் பொறுப்பு வகுக்கிறார் .அதை தொடர்ந்த அதிரை உள்ள முக்கிய நபர்கள் முஹல்லா நிர்வாகிகளாக பதவியில் இருக்கிறார்கள் .ஆரம்பத்தில் அதிரைக்கு என சில நலன்கள் செய்த நிலையில் தற்போது அணைத்து முஹல்லா கூட்டமைப்பு இயங்கா நிலையில் இருக்கிறது .இந்த கூட்டமைப்பு பெயர் அளவுக்காக தொடங்கபட்டதா என மக்கள் மத்தியில் எண்ணம் தோன்ற ஆரம்பித்து விட்டது .பதவிகளை மட்டும் சுமந்து கொண்டு இதன் நிர்வாகிகள் இருந்து கொண்டு இருகிறார்கள் .

    இந்த கூட்டமைப்பு ஊரின் நலனுக்காக எந்த ஒரு முயற்சியும் செய்ய வில்லை என்பதே நிதர்சனமான உண்மை .சமீபத்தில் அதிரை 24 மணி நேர வசதி ,போன்ற ஊர் நலனுக்கான எந்த ஒரு முயற்சிக்கும் இந்த கூட்டமைப்பின் தலைவர் ஒத்துழைப்பு கொடுக்க வில்லை என மக்களில் கருத்து .ஊரின் ஒற்றுமை மற்றும் ஊரின் தேவைகளுக்கான முயற்சிக்கு ஒத்துழைப்பு கொண்டுக்க முன் வரவில்லை என்றால் இந்த கூட்டமைப்பு இருந்து அதிரை மக்களுக்கு என்ன பயன் .இந்த கூட்டமைப்பு தொடங்கிய வரை அதிரையில் எந்த ஒரு ஆக்கபுர்வமான செயலில் இவர்கள் ஈடுபட வில்லை என்பது தான் உண்மை .அதிரையில் ஏழை எளியோர்கள் வங்கிகளில் கடன்கள் வாங்கிகொண்டு வட்டியின் கோர பிடியில் சிக்கி கொண்டு இருக்கிறார்கள் இவர்கள் நிலையை போக்க மாற்று வழிகளை செய்து கொடுக்க இவர்கள் முன் வந்தார்களா???

    ஊர் நலனுக்காக சமூக ஆர்வலர்கள் ,பேரூர் மன்ற தலைவர் ஆகியோர்களில் முயற்சிக்கு இவர்களின் பங்கு என்ன .சென்ற ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு முஸ்லிம் அரசியல் கட்சியின் அதிரை நிர்வாகி ஒரு பொது மேடையில் அதிரை பேரூர் மன்றத்தை விட மிக பெரிய அமைப்பு தான் அணைத்து முஹல்ல அமைப்பு என்று வீர வசனம் பேசினர் .ஆனால் தற்போது முற்றிலும் இயங்க நிலையில் தன் இருந்து வருகிறது என்று வீர வசனம் பேசியவருக்கு தெரியுமா .மக்கள் நலனுக்காக அணைத்து முஹல்லா கூட்டமைப்பு நிர்வாகிகள் இனிவரும் காலங்களில் செயல் படுவார்களா இல்லை பதவிகளை மட்டும் சுமந்து கொண்டு ஊரில் வலம் வருவார்களா ??? என மக்களில் வினாவாக இருக்கிறது.

    ReplyDelete
  6. தொடர்ச்சி...

    4 கருத்துக்கள்

    Adirai Ahmad
    May 2, 2015 at 12:09 AM
    சரியாகத்தான் சொன்னீர்கள். நானும் (as one of the Executive Members) இந்த மவுன நாடகத்தை அவதானித்துக்கொண்டுதான் இருக்கிறேன். துபையில் AAMF எந்த ஆர்வத்துடன் தொடங்கப்பட்டதோ, அதில் ஒரு சதவீதம்கூட இப்போது இல்லை. நான் சொல்வதில், துபாய் நிர்வாகிகளும் சேர்த்துத்தான். அவர்கள் இப்போது துபையில் உள்ள ஒரு சாராரின் ஆதரவாளர்களாக இருந்து, 'குத்பா' பிரசங்கத்தை வெளியிட்டு நிம்மதி அடைந்து வருகின்றனர். அவர்களுக்கும் இந்தக் கூட்டமைப்பின் மீது ஆர்வமில்லை போல் தெரிகின்றது.

    சுன முன .அலியார்
    May 2, 2015 at 10:32 AM
    அம்மாம் இவர்கள் எல்லாம் பதவிக்கு மட்டும் கூட்டமைப்பை வைத்து இருகிறார்கள் .பேசாம இவர்கள் எல்லாம் வேற வேலை பாக்கலாம்

    சுன முன .அலியார்
    May 2, 2015 at 12:58 PM
    brahimMay 2, 2015 at 9:00 AM
    அஸ்ஸலாமு அழைக்கும் எம்.எம்.எஸ் குடும்பம் மேலதெரு என்ற குறுகிய வட்டத்துக்குள் சுருக்கி விடஆமல் எம்,எம்,எஸ்,குடும்பம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அதிரையின் குடும்பமாக தான் செயல்பட்டு வருகிறது .மர்ஹூம் அரபாக்கா... மர்ஹூம் ,AMS ,... மர்ஹூம் AJ ஜபாராக்கா ....,மர்ஹூம் மம்தம்பி ஹாஜியார்,.... மர்ஹூம் ஷைக் தம்பி ஹாஜியார் ......,மர்ஹூம் ரஹ்மதுல்லா ஹாஜியார். ......மர்ஹூம் எம்.எம்.சம்சுதீன் ஹாஜியார் மர்ஹூம் ஜனாப் த அ செய்மொகம்மது காகா....,,,,, மர்ஹூம் த அ ...மர்ஹூம் மன்னார் அப்துல் காதராக்கா ... மர்ஹூம் செய்யதலி மறைக்கா .....மர்ஹூம் குத்தூசாக்க ,...ஜனாப் இக்பால் ஹாஜியார் . ....ஜனாப் அ.ஜ வக்கீல் ரசாக் ஹாஜியார்..... .ஜனாப் ஷைக் அலி மரைக்கார் ஜனாப் த்ரீ எம் ஹசன் ஹாஜியார் .மர்ஹூம் ஜனாப் கோ மு சாகுல் ஹமீத் காக்க மர்ஹூம் ஜனாப் கோ மு அலியாராக்கா .ஜனாப் கோ மு ஷேகாதி யாக்கா ........பழன்ஜெட்டி தெரு சண்முக தேவர் அவர்கள் சேர்மன் வாடி பன்னீர் செட்டியார் அவர்கள் ......கரையூர் தெரு சின்னையா பிள்ளை (வக்கீல் மரவன்பிள்ளையின் தந்தையார் ) அணைத்து அதிரை பிரமுகர்களுடனும் ஒரு குடும்பமாகதான் எம்.எம்.எஸ்.குடும்பம் அன்றிலிருந்து இன்றுவரை பழகி வருகிறது இதில் வேற்றுமையே இல்லை.மேற்சொன்னவர்களின் ஆலோசனை இல்லாமல் எந்த ஒரு காரியத்தையும் எம்.எம்.எஸ் குடும்பம் செய்ததில்லை ..அதிரைக்கு அரசு மருத்துவமனை ....கால்நடை மருத்துவமனை குடிநீர் தேக்கம் தண்ணீர் தொட்டி அனைத்துமே மர்ஹூம் எம்.எம்.எஸ் ஷைக் தாவூத் மரைக்கார் கொண்டுவந்ததே ...ஜனாப் kma ஜமால் காக்கா உங்களுக்கு தெரியாதா .இன்றளவும் அதிரைக்கு 24 மணி நேர மருத்துவ மனை வர எம்.எம்.எஸ் குடும்பம் தங்களாலான முயற்சிகளை எடுத்து கொண்டுதான் இருக்கிறது இப்ராகிம் அவர்களே பஸ் ஸ்டாண்ட் பள்ளி விவகாரமும் இவர்களின் அலசனையுடன் செய்தார்களா புகழ் பாடுவதை நிறுத்தும் ஒய் .....mms ஷேய்க் நசுருதீன் 24 மணி நேர முயற்சிக்கு ஏன் ஒத்துழைப்பு குடுக்கலா ///இது அரசியல் கால்புனற்சியா ஒய் பதில் சொல்லும்

    Ahamed Anas
    May 2, 2015 at 2:44 PM

    இதுபோன்ற தலைப்பைவிட்டு அதிரை எக்ஸ்பிரஸ் சிண்டுமுடிந்து விடும் வேலையெல்லாம் செய்ய கலமிறங்கிவிட்டதோ ! சபாஷ் ! நல்ல சமுதாய நாளிதழ். யாரை ஜால்ரா அடிகிறது ? என்ன லாபம் கிடைக்கும் ? இதற்கு ஒரு ஊடகம் தேவையா ? விபரம் தர வேண்டும். இது வேண்டாத வேலை !

    அனைத்து முஹல்ல ஒருங்கிணைப்பு ஆரம்பிக்கப்பட்ட நோக்கம் வேறு. அவர்கள் நோக்கம் செயல்படுத்தமுடியாமல் போய்விட்டதால் ஏற்படித்தினவர்களே இன்று தூற்றுகிறார்கள் ! எதையையோ புகுத்த வந்தார்கள்....இன்று முடியவில்லை அதனால் அதனை அழிக்க அவர்களே முயற்சிக்கிண்றார்கள். இயங்க ஒத்துழைப்பு தந்தால் எல்லாம் இயங்கும். அதனை அழிக்க திட்டமிட்டதால் இப்படித்தான் கருத்துக்களும் எழுத்துக்களும் எழுதுவார்கள்..

    // நிர்வாகி ஒரு பொது மேடையில் அதிரை பேரூர் மன்றத்தை விட மிக பெரிய அமைப்பு தான் அணைத்து முஹல்ல அமைப்பு என்று வீர வசனம் பேசினர் .ஆனால் தற்போது முற்றிலும் இயங்க நிலையில் தன் இருந்து வருகிறது என்று வீர வசனம் பேசியவருக்கு தெரியுமா//
    இது யாருடைய பேச்சு ? இதை யார் எழுதினார் ? அந்த அதிரை நியுஸ் நிர்வாகி யார் ? இப்படி சண்டை மூட்டிவிடும் வேலையை எந்த லாபத்திற்காக செய்கிறீர்கள் ? உங்கள் உள் நோக்கம்தான் என்ன ?

    பத்திரிக்கை தர்மம் தெரியாமல் இதுகால் வரை இந்த அதிரை நிய்ஸ் நடத்தினதே தப்பு ! ஊரில் அமைதியைக் கெடுக்க இதுபோல செய்திகள் விட யார் உங்களுக்கு அனுமதி தந்தது ? இதற்கு அதிரை நியுஸ் பதில் சொல்லியே ஆகவேண்டும்

    ReplyDelete
  7. அடுத்த பத்திரிகை செய்தியை போட்டதாக அதிரை நியூஸ் தவறாக நினைக்க வேண்டாம்.

    சமுதாயம் சில பத்திரிக்கையாலும் தவறாக வழி நடத்தப்படுகிறது என்பதைக் காட்டாவே .

    ReplyDelete
  8. ஊரில் ஒரு சில இடங்கள் வளர்ச்சி கண்டுள்ளது அதற்க்கு காரணம் அரசியல் பலம் மிக்கவர்கள் தங்கள் தெருக்களை செம்மை படுத்திக் கொண்டார்கள் ( ரோடு ,தெரு மின் விளக்கு , தங்கு தடையின்றி தண்ணீர், அரசு பள்ளி, குளம் ) அதே போல் வசதி படைத்தவர்கள் பொதுநலனில் அக்கறைக் கொண்டு நன்மையான காரியங்கள் செய்துள்ளார்கள், ஆனால் 45 ஆண்டு காலமாக அதிரைக்கு தந்தையாக MMS குடும்பத்தவர்களுக்கு ஓட்டு வங்கியாக இருந்த தெருக்களுக்கு என்ன செய்தார்கள்? உதாரணமாக தரகர் தெரு ஆர்முக கிட்டங்கி தெரு இருண்டுக்கும் பொதுவான கடல் துறைமுகத்துக்கு போக ஒரு மின் கம்பம் அமைத்ததுண்டா? தாகத்தை போக்க ஒரு தண்ணீர் குழாய் செய்ததுண்டா அல்லது குறைந்தது போக வர வழிதடம் அமைத்ததுண்டா ? இன்றும் அதே நிலைமை தான் !!!!

    தேர்தல் நேரத்தில் வாக்குர்தி கொடுப்பார் அந்த வாக்குர்தி காற்றோடு போய்விடும், 45 காலம் ஆண்டவர்களுக்கு அப்பகுதி மக்களுக்கு அடிப்படை தேவை செய்யாதவர் ஊர் நலனுக்கா போராடினார் என்று எப்படி சொல்ல முடியும்? தன் வணிக வளாகத்தை பாதிக்கதாவாறு செய்துக் கொண்டார் வேறென்ன சொல்ல முடியும்!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.