.

Pages

Sunday, May 3, 2015

செடியன் குளத்தின் அருகே இறந்து போன மாட்டை அப்புறப்படுத்திய ஆர்வலர்கள் !

அதிரையின் பொக்கிஷங்களில் ஒன்று செடியன் குளம். இந்த குளத்தில் இருக்கும் குறைந்த அளவு தண்ணீரில் தினமும் ஏராளமானோர் குளித்து வருகின்றனர். நேற்று காலை குளத்தின் அருகே திடீரென மாடு ஒன்று இறந்து கிடந்தது. நேரம் செல்ல செல்ல இறந்துபோன மாட்டின் வயிறு வீங்க ஆரம்பித்தது. இன்னும் சில மணி நேரங்களில் வெடித்து சிதற கூடிய அபாயகரமான சூழல் உருவாகியது. மாட்டின் வயிறு வெடித்தால் அப்பகுதியின் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது. உடனே அப்பகுதியில் சென்ற சமூக ஆர்வலர் மான் சேக், இறந்து கிடந்த மாட்டை அப்புறப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டார். இதையடுத்து நேற்று இரவு ஜேசிபி வாகனம் வரவழைக்கப்பட்டு, ஆழமாக பள்ளம் தோண்டி மாட்டை புதைத்தனர். பேரூராட்சியின் துப்புரவு பணியாளர்களும் உடனிருந்து உதவினர். இதன் செலவீனங்களை பெரிய ஜும்மா பள்ளி நிர்வாகம் பொறுப்பேற்றது.
 
 
 

2 comments:

  1. மின்னல் தாக்கி மாடு இறந்ததா அல்லது விசத்தை வைத்து கொன்றார்களா என்ற மர்மமானமுறையில் மாடு இறந்துள்ளது இதற்க்கு போஸ்ட்மார்டம் ஏதும் கிடையாதா?, கால்நடை மருத்துவமனை ஒன்று நம்மவூரில் உள்ளது அவர்கள் வந்து மாட்டை பரிசோதனை செய்யவில்லையா? கால்நடை நோய் புலனாய்வு பிரிவு இயக்குனர்கள் என்ன செய்கிறார்கள்? தண்ணீர் குடிக்க வந்த இடத்தில் இறந்து போனதா என்று கூட தெரியவில்லை - பாவம்!

    நோய் பரவாமல் தடுக்க சமூக ஆர்வலர் மான் சேக் எடுத்த செயல் பாராட்டக்கூடியது - நன்றி.

    ReplyDelete
  2. Namathu man Shaik kaka avarhaludaye samoohe pni thodare nam anaivarum duvaseyvom. Melum man shaik kaka pondru samoohe arvalarhall uruvahe dua seyvom aameen

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.