முத்துப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1980-ம் முன் படித்த பழைய மாணவர்கள் தற்பொழுது பல துறைகளில் பணியாற்றியும், ஓய்வு பெற்றும், பல்வேறு இயக்கங்களில் உள்ளனர். இவர்கள் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களிலும் உள்ளனர். இந்த நிலையில் இவர்களின் சந்திப்பு கூட்டம் நேற்று காலை கொய்யா மஹாலில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பழைய மாணவர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்துக் கொண்டு தாங்கள் பள்ளி பருவ காலத்தில் உள்ள அனுபவங்களை பகிர்ந்து கொண்டு பேசினார்கள். மேலும் சிறப்பு பெற்றவர்களுக்கு பாராட்டி கௌரவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளியின் பழைய மாணவர்களான இலக்கிய மன்ற செயலாளர் ராஜ்மோகன், திருவாரூர் நேதாஜி கல்வி குழுமம் தாளாளர் ஜெங்கட்ராஜீலு, வேலாண்மை உதவி அலுவலர் ஜெயகுமார், வர்த்தகக்கழக தலைவர் ராஜாராம், கௌரவ தலைவர் திருஞானம், முன்னால் பேரூராட்சி துணைத் தலைவர் மாணிக்கம், த.மு.எ.ச செயலாளர் செல்லதுரை, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சுல்தான் இபுராஹிம், மூத்த குடிமக்கள் இயக்க பொருப்பாளர்கள் ராமைய்யன், தங்க வீரையன், நாகை வழக்கறிஞர் சலீம் கான், முன்னால் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சக்திவேல், ஜீவானந்தம், முன்னால் ரோட்டரி தலைவர் ராமலிங்கம், வர்த்தக சங்க செயலாளர் அப்துல் அஜீஸ் மற்றும் குலாம் ரசூல், செல்லப்பா உட்பட பலரும் கலந்துக் கொண்டனர்.
செய்தி மற்றும் படம்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை
செய்தி மற்றும் படம்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.