.

Pages

Thursday, May 14, 2015

ஆதரவற்ற சிறார்களுக்கு இன்று ஆதார் அட்டை வழங்கும் சிறப்பு முகாம் !

பெற்றோரால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆதார் அட்டை வழங்கும் சிறப்பு முகாம் 14-ஆம் தேதி (வியாழக்கிழமை) தஞ்சாவூரில் நடைபெறுகிறது.

இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நா. நடராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பெற்றோரால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற, பெற்றோரை இழந்த குழந்தைகள் அரசு குழந்தை இல்லம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் தனியார் குழந்தைகள் இல்லங்களில் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இக்குழந்தைகள் கல்வியை முடித்து இல்லங்களை விட்டு வெளியே வரும்போது, இந்திய குடிமகனுக்கான எவ்வித அடையாளமும் இன்றி வெளியேறுகின்றனர். இந்நிலையை போக்கிட, குழந்தைகள் இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்கு ஆதார் அட்டை வழங்கிட சமூக நலத் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி 14-ஆம் தேதி காலை 9 மணிக்கு, தஞ்சாவூர் தெற்கு காவல் நிலையம் எதிரில் உள்ள, அரசினர் குழந்தைகள் இல்ல வளாகத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆதார் அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் இந்த முகாமை தொடங்கி வைக்கிறார்.

1 comment:

  1. இந்த ஆதார் அட்டையில் வாக்காளர் அட்டை போல் ஏகப்பட்ட குளறுபடிகள் அதிகாரிகள் செய்துவிடுகிறார்கள், வயது 27 என்றல் 47 என்றும்; பெயர் சுந்தர் என்றால் சுந்தரி என்றும் கணவர் பெயரில் பக்கத்துக்கு வீட்டுகாரர் பெயரும் பதிவு செய்யும் கேவலம் தான் நடக்குது. அட்டையில் ஒரு திருத்தம் திருத்த பல தடவை அலுவலகத்துக்கு செல்லவேண்டியுள்ளது ; நமது அரசு ஊழியர்களின் திறமையை தயவு செய்து மேலும் சோதிக்க வேண்டாம் ஆகவே இதனை தனியாரிடம் ( TCS ) விட்டுடா என்ன? ஆட்சியர் கொஞ்சம் சிந்திப்பாரா?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.