இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நா. நடராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பெற்றோரால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற, பெற்றோரை இழந்த குழந்தைகள் அரசு குழந்தை இல்லம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் தனியார் குழந்தைகள் இல்லங்களில் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இக்குழந்தைகள் கல்வியை முடித்து இல்லங்களை விட்டு வெளியே வரும்போது, இந்திய குடிமகனுக்கான எவ்வித அடையாளமும் இன்றி வெளியேறுகின்றனர். இந்நிலையை போக்கிட, குழந்தைகள் இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்கு ஆதார் அட்டை வழங்கிட சமூக நலத் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி 14-ஆம் தேதி காலை 9 மணிக்கு, தஞ்சாவூர் தெற்கு காவல் நிலையம் எதிரில் உள்ள, அரசினர் குழந்தைகள் இல்ல வளாகத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆதார் அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் இந்த முகாமை தொடங்கி வைக்கிறார்.
இந்த ஆதார் அட்டையில் வாக்காளர் அட்டை போல் ஏகப்பட்ட குளறுபடிகள் அதிகாரிகள் செய்துவிடுகிறார்கள், வயது 27 என்றல் 47 என்றும்; பெயர் சுந்தர் என்றால் சுந்தரி என்றும் கணவர் பெயரில் பக்கத்துக்கு வீட்டுகாரர் பெயரும் பதிவு செய்யும் கேவலம் தான் நடக்குது. அட்டையில் ஒரு திருத்தம் திருத்த பல தடவை அலுவலகத்துக்கு செல்லவேண்டியுள்ளது ; நமது அரசு ஊழியர்களின் திறமையை தயவு செய்து மேலும் சோதிக்க வேண்டாம் ஆகவே இதனை தனியாரிடம் ( TCS ) விட்டுடா என்ன? ஆட்சியர் கொஞ்சம் சிந்திப்பாரா?
ReplyDelete