தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், பழவேற்காடு கிராமத்தில் உள்ள பட்டுக்கோட்டை கயிறு உற்பத்தியாளர்கள் குழுமம் மூலம் தயாரிக்கப்படும் கயிறு பித் பிளாக் தயாரிக்கும் தொழிற்சாலையினை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என். சுப்பையன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்விற்கு பிறகு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது:
பழவேற்காடு தென்னை நார் மற்றும் கயிறு உற்பத்தியாளர்கள் குழுமம் தொழிற்சாலை அமைத்து தென்னை நார் கழிவு பித்தை பயன்படுத்தி (பிளாக்) கட்டிகள் செய்து வருகின்றார்கள். பித் கட்டிகள் தயார் செய்யும் பொது பயன்பாட்டு மையத்தினை பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதி தென்னை விவசாயிகள் பயன்படுத்தி ஆர்வமுள்ள தொழில் முனைவோர்களாக தங்களை உயர்த்திக் கொள்ள கேட்டுக் கொள்கிறேன்.
இத்தொழிற்சாலை வளாகம் 2.37 ஹெக்டேர் பரப்பளவில் அமைக்கப் பட்டுள்ளது. பித் தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் கட்டிடங்கள் அமைப்பதற்கு ரூ.14 இலட்சமும், இயந்திரங்கள் ரூ.42 இலட்சம் மதிப்பிலும் அமைக்கப்பட்டுள்ளது.
மத்திய கயிறு வாரியம் 75 சதவிகிதம் அதாவது ரூ.42 இலட்சமும், தமிழக அரசு மான்யம் ரூ.12 இலட்சத்து 50 ஆயிரம் மான்யம் வழங்கப்பட்டுள்ளது. குழும உறுப்பினர்கள் முதலீடு ரூ.3 இலட்சத்து 50 ஆயிரமாக மொத்தம் ரூ.58 இலட்சத்தில் இத்தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இத்தொழிற்சாலையில் 15 நபர்கள் வேலை வாய்ப்பு பெற்று பணிபுரிந்து வருகின்றனர்.
தென்னை நார் கழிவுகளை சுத்தம் செய்து சலித்து நீரில் கழுவி உலர வைத்து பின்பு 5 கிலோ கட்டிகளாக மாற்றி உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் விற்பனைக்கு தயார் செய்கின்றனர்.
வெளிநாடுகளில் 5 கிலோ பித் கட்டிகளை மண்ணிற்கு மாற்றாக விவசாயத்திற்கும், காய்கறிகள், பூச்செடிகள், வீட்டு தோட்டங்கள் அமைக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
முதன்முதலாக தயாரிக்கப்பட்ட தென்னை நார் கழிவு பித்து கட்டிகள் (பிளாக்குகள்) தென்கொரிய நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இத்தொழிற்சாலையின் உற்பத்தி திறன் ஒரு ஷிப்ட்டிற்கு (8 மணி நேரம்) 5 டன்களாகும். இத்தொழிற்சாலையின் மூலம் 15 தென்னை நார் தொழிற்சாலைகள் பயன்பெறுகின்றனர்.
பட்டுக்கோட்டை மற்றும் பேராவ10ரணி பகுதிகளில் உள்ள தென்னை நார் உற்பத்தி நிறுவனங்கள் 65 கயிறு உற்பத்தி நிறுவனங்கள் 35 சுருள் கயிறு உற்பத்தி நிறுவனங்கள் 10 உள்ளன. தென்னை நார் கழிவு பித்து கட்டிகள் (பிளாக்குகள்) தயாரிக்கும் நிறுவனத்தை தென்னை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், மேல உளுர் கிராமத்தில் ரூ.2.12 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் அரிசி ஆலையினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திரு. எம். ராமலிங்கம், சிட்கோ மேலாளர் திரு.குணாளன், பட்டுக்கோட்டை கயிற உற்பத்தியாளர் குழுமத்தின் தலைவர் திரு.ஷியாம்சுந்தர் மற்றும் உறுப்பினர்கள், மேல உளுர் அரிசி ஆலை குழுமத்தின் உறுப்பினர்களும், கயிறு குழுமத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.