இந்நிலையில் அறுந்து கிடந்த மின்கம்பியை தொட்ட இரண்டு காக்கைகள் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிர் இழந்தது. இதனால் இந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உடனே இந்த பகுதியினர் மின்சார வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெரிவித்தனர். மின்சார ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வருவதில் காலதாமதம் ஏற்பட்டதால் பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர்.
கடைசி செய்தி:
அதிரை மின்சார வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அறுந்து கிடக்கும் மின்கம்பியை சரிசெய்தனர்.




பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஎன்னுடைய தம்பி கிஜார் முஹம்மது வீடு இந்த மின் கம்பத்திற்கு அருகில் தான் இருக்குது, தற்போது தம்பி கிஜார் முஹம்மது அமெரிக்காவில் இருக்கின்றார்.
மின்வாரிய ஊழியர்கள் வர தாமதம் ஆகவே, வீட்டிலிருந்து தம்பிக்கு தகவல் போக, உடனே தம்பி இன்று காலை 9.30மணிக்கு தொலைபேசி வாயிலாக என்னை தொடர்பு கொள்ள, உடனே நான் மின்வாரிய அலுவலராகிய போர்மேன் திரு முருகேஷ் அவர்களுக்கு தகவல் கொடுக்க. மற்ற வேலைகள் சிறப்பாக முடிந்தது.
குறிப்பு:- அதிரையில் தற்போது மின்கம்பிகள் அதிகமான இடங்களில் அறுந்து விழுந்த வண்ணம் இருக்கின்றது. பொது மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. மு.முஹம்மது அலியார்.