துபாய்: துபாயில் சாலைகளில் தற்போது நவீன தொழில் நுட்பத்துடன் அதிநவீன வாகன கண்காணிப்பு கேமராக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான இடங்களில் பழைய கேமராக்களுக்கு பதில் இப்புதிய நவீன வகை கேமராக்கள் பொருத்தப்படுகிறது. இக்கேமராக்கள் விதிகளை மீறி அதிவேகமாக ஒட்டுவதை மட்டுமல்லாமல் விதி மீறல்களான ,செல்போனில் பேசி கொண்டேஓட்டுதல், அதி வேகமாக ஓட்டுதல்,மிக மெதுவாக ஓட்டுதல், வாகனங்களுக்கு இடையேயான இடைவெளி இல்லாமல் ஓட்டுதல் ,சீட் பெல்ட் அணியாமல் ஓட்டுதல்கனரக வாகனங்கள் தங்களுக்கான சாலையை மீறி ஓட்டுதல், கனரக வாகனங்களுக்கான நேரத்தை மீறி ஓட்டுதல், உள்ளிட்ட பல்வேறு வகையான விதி மீறல்களை படம் பிடித்து பதிவு செய்யும் .
இக்கேமரா மூலம் வீடியோ பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. துபாயில் நான்கு வகையான வாகன கண்காணிப்பு தொழில்நுட்ப கேமராக்கள் பயனபடுத்தப்படுகிறாது சென்சிஸ்,லக்ஸ், லேசர் கன்,மற்றும் தற்போது அறிமுகப்படுத்தப்படும் வைட்ரானிக் தொழிட்நுட்பம் உள்ளிட்டவையாகும். எனவே விதிமுறைகளை மீறுவோர் கண்காணிப்புக்குள்ளாகி நடவடிக்கைகளுக்கு உள்ளாவர்கள் எனவே வாகன ஓட்டி மிகுந்த எச்சரிக்கையாக வாகனங்களை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி:தினகரன்
Thanks for u r information adirai news dubai all driving people allotted please follow up for rta rules and u r safety health.
ReplyDelete