கடந்த 10/05/2015 ஞாயிற்றுக் கிழமை துபாயில் வெளியாகும் அல் பயான் என்கிற அரபிப் பத்திரிக்கையின் 35 வது வருட விழா சிறப்புடன் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியின் போது இந்த நிறுவனத்தில் கடந்த 32 வருடமாக நன்னடத்தையுடனும் சிறப்புடனும் பணி புரிந்ததற்காக நீடூரைச் சேர்ந்த நஸீர் அலி என்பவருக்கு அந்நிறுவனத்தின் மானேஜிங் டைரக்டரும் ஷீஃப் எடிட்டருமான தாஹின் ஷாஹின் [Mr.thahin shahin] அவர்களால் பாராட்டி சான்றிதழ் வழங்கி பரிசளித்து கௌரவித்தது. அத்துடன் இன்று வெளியான அல் பயான் பத்திரிக்கையிலும் இச்செய்தியை புகைப்படத்துடன் பிரசுரித்து இருந்தது.
அமீரகத்தில் சமீப காலமாக நன்னடத்தைக்காகவும் சிறப்புடன் பணி புரிந்தமைக்காகவும் பாராட்டுதலும்,அன்பளிப்புக்களும் கௌரவிப்பும் அதிக எண்ணிக்கையில் தமிழர்கள் பெறுவது குறிப்பிடத்தக்கது.
நஸீர் அலி நீடூர் சீசன் எனும் இணைய தள நிர்வாகி முகம்மது அலி அவர்களின் மகனார் என்பது குறிப்பிடத் தக்கது.
தகவல் நஸீர் அலி துபாய்
வாழ்த்துக்கள் பல.
ReplyDeleteவாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
ReplyDelete