பேச்சுவார்த்தை முடிவின் படி, அதிரை அரசு மருத்துவமனையில் இதுவரையில் இரவு நேர மருத்துவர் நியமிக்கப்படாததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் அதிரை பேரூராட்சி தலைவர் எஸ். ஹெச் அஸ்லம் தலைமையில், மருத்துவமனை வளாகத்தில் எதிர்வரும் [ 16-05-2015 ] காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்துவது தொடர்பாக நேற்று மாலை அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் தலைமையில் அதிரை பேரூராட்சி அலுவலக வளாகத்தில் சிறப்பு கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் சம்பந்தபட்டோரிடம் தான் நடத்திவரும் பேச்சுவார்த்தை குறித்து எடுத்துரைத்தார். மேலும் காலதாமதமாகி வரும் நியாமான கோரிக்கை வெற்றிபெற அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்களை திரளாக கலந்து கொள்ள வைத்து சம்பந்தப்பட்டோரின் கவனத்திற்கு மீண்டும் எடுத்து செல்ல வேண்டுகோள் விடுத்தார்.
இதில் அதிரை அனைத்து மஹல்லா நிர்வாகிகள், கிராம பஞ்சாயத்தார்கள், சமூக ஆர்வலர்கள் - ஊர் பிரமுகர்கள் ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார்கள்.
ஆரம்பத்தில் இருந்த வேகத்தை விட இப்ப சுதி குறைந்துக்கொண்டே போகுதே, வாக்குறுதி கொடுத்த அதிகாரிகளின் அலட்சியக் போக்கை கண்டித்து மாபெரும் சாலை மறியல் போராட்டம்னு அறிவித்தால் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும், ஆலோசனை ஆலோசனை என்றிருந்தால் நோன்பு வந்திடும் பிறகு போராட்டம் தள்ளி போய்க்கொண்டே இருக்கும்.
ReplyDeleteமக்கள் குடித்து தாலி அறுக்க ஆங்காங்கே டாஸ்மார்க் வேகமாக திறப்பானுங்க அடிக்கடி விபத்து நடக்கும் பகுதிக்கு டாக்டர் அமர்த்த யோசிப்பானுங்க, இந்த அவல நிலைமை தமிழகத்தில் பரவலாக உண்டு! எப்பத்தான் தமிழகத்தில் எல்லா மருத்துவமனையும் தனியாரிடம் ஒப்படைக்கப் போராங்களோ? அப்பத்தான் அரசு மருத்துவமனை சிறந்து விளங்கும்!