.

Pages

Wednesday, May 13, 2015

ஜித்தாவில் நடைபெற்ற சகோதரத்துவ சங்கமம் - ஏராளமான அதிரையர்கள் பங்கேற்பு!

சவூதி அரேபியா ஜித்தாவில் தமிழ் முஸ்லிம்கள் குடும்பத்துடன் கலந்துகொண்ட சகோதரத்துவ சங்கமம் நிகழ்ச்சி கடந்த வெள்ளிக்கிழமை அன்று மக்கா ரோட்டில் உள்ள இம்தியாஸ் இஸ்திராஹா என்ற திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

மாலை 03:30 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், பெரியவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் என ஆண்கள், பெண்கள் ஆகியோருக்கு தனித்தனியே நடைபெற்றது.

மேலும் மாணவர்களுக்கான கிராத் போட்டி, வினாடி வினா போட்டி, இஸ்லாமிய பாடல் போட்டி ஆகியவை நடத்தப் பட்டு வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டன.

இந்நிகழ்ச்சியில் அதிரை ஜஃபருல்லாஹ் அவர்கள் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார். மேலும் இந்நிகழ்ச்சியில் அதிரை மாணாக்கர்கள் பல போட்டிகளில் பங்குபெற்று பரிசுகளை வென்றனர்.

பின்பு சிறப்பு விருந்தினர்களின் சொற்பொழிவுளுக்குப் பின் இறுதியில் அனைவருக்கும் இரவு உணவு வழங்கப் பட்டது.

இரவு 12 மணிவரை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சுமார் 800க்கும் அதிகமான ஜித்தா மற்றும் மக்கா வாழ் மக்கள் திரளாக கலந்துகொண்டனர்.



2 comments:

  1. ஜபரூல்லாஹ் காக்கா வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. ஜபரூல்லாஹ் காக்கா வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.